செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கே டெண்டரில் முன்னுரிமை… டாஸ்மார்க் உரிமையாளர்கள் சங்கம் புகார்!!

By Narendran SFirst Published Aug 5, 2022, 6:46 PM IST
Highlights

டாஸ்மாக் டெண்டரில் நிகழும் முறைகேட்டில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடு உள்ளதாக தமிழ்நாடு டாஸ்மார்க் உரிமையாளர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. 

டாஸ்மாக் டெண்டரில் நிகழும் முறைகேட்டில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடு உள்ளதாக தமிழ்நாடு டாஸ்மார்க் உரிமையாளர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் டாஸ்மாக் குடோன் இயங்கி வருகிறது. இங்கு பார் உரிமம் புதுப்பித்தல், புதிதாக பார் எடுப்பதற்கான டெண்டர் விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் டெண்டர் விடுவதற்கான விண்ணப்பம்  2 ஆம் தேதி ஆன்லைனில் எடுத்துக் கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கடுப்பான நீதிமன்றம்.. ஓபிஎஸ் தரப்பை அலறவிட்ட நீதிபதி - ஒருவழியாக மன்னிப்பு கேட்ட ஓபிஎஸ் தரப்பு !

ஆனால் ஆன்லைனில் இதுவரை விண்ணப்ப படிவம் ஏதும் வரவில்லை என்பதால் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மார்க் சங்க உரிமையாளர்கள் செம்பரம்பாக்கத்தில் உள்ள டாஸ்மார்க் குடோனுக்கு வந்து அதிகாரியிடம் விண்ணப்ப படிவம் குறித்து கேட்டபோது, அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்து உள்ளனர். மேலும் டென்டர் விண்ணப்பம் பெறுவதற்கு நீங்கள் துறை சார்ந்த அமைச்சரை சென்று பார்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: “ஆப்ரேஷன் தாமரை 2.0 - தமிழகம் வருகிறார் அமித்ஷா.." அலெர்ட் ஆன திமுக !

இது குறித்து பார் உரிமையாளர் சங்க தலைவர் அன்பரசு கூறுகையில், தொடர்ந்து டாஸ்மார்க் பார் டென்டரில் முறைகேடு நடைபெற்று வருகிறது. தற்போது விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கு கூட துறை சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்கும்படி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பார் டென்டர் எடுப்பதில் அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்குகின்றனர். மேலும் பார் டென்டர் எடுப்பதில் ஒரு தலை பட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இதேபோல் அமைச்சரின் தலையீடு தொடர்ந்தால் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும் என தெரிவித்தார். 

click me!