உலக நாடுகள் மத்தியில் தமிழ்நாட்டின் செல்வாக்கு உயரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் மத்தியில் தமிழ்நாட்டின் செல்வாக்கு உயரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில், உலகம் முழுவதிலும் இருந்து வந்த 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், ஓபன் பிரிவில் இந்திய 'B' அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. மேலும் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. அதோடு மகளிர் பிரிவில் இந்திய 'A' அணி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெண்கலம் வென்றுள்ளது. மேலும் உக்ரைன் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா… தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் சிவகார்த்திகேயனின் மகள்!!
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு நடத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் செல்வாக்கு உலக நாடுகள் மத்தியில் உயரும். போட்டியில் வெற்றிப்பெற்றவர்களை விட நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ரூ.102 கோடி ஒதுக்கி 18 துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இப்போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர் மெய்யநாதன் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். சென்னையில் தங்கியிருந்த நாட்களை வெளிநாட்டு வீரர்கள் மறக்க மாட்டார்கள் என நம்புகிறேன். தமிழகத்தின் கலாசாரம், வரலாறு, குறிப்பாக உணவு ஆகியவற்றை ரசித்திருப்பார்கள் என நம்புகிறேன்.
இதையும் படிங்க: \ஒலிம்பிக் தங்க வேட்டை, ஜல்லிக்கட்டுக்கு பிரம்மாண்ட களம்!ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் ஒலிம்பியா தங்கவேட்டை திட்டம் 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. கபடி மற்றும் சிலம்பத்திற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடத்தப்பட உள்ளது. சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம். நவீன தேவைக்கு ஏற்ப விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தவுள்ளோம். சர்வதேச கடற்கரை போட்டிகளை நடத்தவும் தமிழ்நாடு தயாராக உள்ளது. அதற்குள் செஸ் விளையாட்டு போட்டி முடிந்துவிட்டதா என ஏங்கும் வகையில் போட்டி சிறப்பாக நடைபெற்றுள்ளது.செஸ் விளையாட்டு போட்டிக்காக இங்கு வந்திருந்த நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு எப்போதும் வரலாம்! உங்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சகோதரன் இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள் எனக்கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.