திறனற்ற திமுக அரசு! அதென்ன 2 சதவீதம் வரி! இது சாமானிய மக்களின் கனவை கலைக்கும் செயல்! சொல்வது யார் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Oct 14, 2023, 8:22 AM IST

உண்மையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இதுகுறித்து விவரம் கேட்டபொழுது இருசக்கர வாகனங்களுக்கு 7,000 முதல் 8,000 ரூபாய் வரையிலும் கார் போன்ற வாகனங்களுக்கு 25,000 ரூபாய் வரையிலும், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு 50,000 ரூபாய் வரையிலும் வாகன வரி உயர்வு இருக்கும் என்று அறிவித்துள்ளார்கள்.


வாடகை வாகனங்களுக்கான வரியையும், இருசக்கர வாகனங்களுக்கான வரியையும் அதிகரித்திருக்க கூடாது என எம்.யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது. இதனால் சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கார்கள், டாக்சிகள் போன்ற அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரியை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வரி உயர்வு சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவை கலைக்கும் விதமாக அமையும் என எம்.யுவராஜா கூறியுள்ளார். 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ஓபிஎஸ் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகியை தட்டித்தூக்கிய இபிஎஸ்.. மாஸ் காட்டும் அன்வர் ராஜா.!

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் எம்.யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஆளும் திறனற்ற திமுக அரசு ஆயிரம் ரூபாயை சில லட்சம் பெண்களுக்கு மட்டும் உதவி தொகையாக வழங்கிவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, பேருந்துகளில் மறைமுகக் கட்டண உயர்வு என ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கு உபயோகப்படும் அனைத்து பொருட்களின் விலைகளை உயர்த்தி அவர்களது வேதனையை வேடிக்கை பார்க்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சட்டசபையில் தமிழகத்தில் அனைத்துவிதமான வாகனங்களுக்கும் வாகன வரியை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இரண்டு சதவீதம் வாகன வரி உயர்வு என்று மேலோட்டமாக அறிவித்து உள்ளார்கள். உண்மையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இதுகுறித்து விவரம் கேட்டபொழுது இருசக்கர வாகனங்களுக்கு 7,000 முதல் 8,000 ரூபாய் வரையிலும் கார் போன்ற வாகனங்களுக்கு 25,000 ரூபாய் வரையிலும், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு 50,000 ரூபாய் வரையிலும் வாகன வரி உயர்வு இருக்கும் என்று அறிவித்துள்ளார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஏற்கெனவே டீசல், பெட்ரோல் விலையால் விலைவாசி விண்ணை முட்டி நிற்கிறது. இப்பொழுது திமுக அரசு அறிவித்துள்ள வாகன வரி உயர்வால் ஏழைகளின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்து நிற்கும். இதனால் பாதிக்கப்படுவது ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கீழ் வாழும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பெரும் கஷ்டத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும்.

சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவை கலைக்கும் விதமாக அமையும். இருசக்கர வாகனம் இல்லாதவர்கள் ஆட்டோ மற்றும் சிறிய வகை கார்களை தங்களின் முக்கிய போக்குவரத்து வாகனமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் அவர்களுக்கு வரியை ஏற்றி இருப்பது, அதிக கட்டணம் வசூலிக்க காரணமாகிவிடும்.

இதையும் படிங்க;-  முதல்வர் ஸ்டாலின் குறித்து இனி அவதூறாக பேசமாட்டேன்.! பல்டி அடித்த அதிமுக மாஜி அமைச்சர்-ஜாமின் வழங்கிய நீதிபதி

வாடகை வாகனங்களுக்கான வரியையும், இருசக்கர வாகனங்களுக்கான வரியையும் அதிகரித்திருக்க கூடாது. எனவே ஆளும் தமிழக திமுக அரசு வேறு வகையில் வருமானத்தை ஈடுகட்ட முயற்சி எடுக்க வேண்டுமே தவிர வாகன வரி வியர்வை கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று  எம்.யுவராஜா கூறியுள்ளார்.

click me!