திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கையாக போச்சு.. கொதிக்கும் டிடிவி. தினகரன்..!

By vinoth kumar  |  First Published Nov 11, 2022, 7:33 AM IST

எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழகத்திற்குச் சொந்தமான பல இடங்களை ஏற்கனவே படிப்படியாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் கேரளா, தற்போது முழுமையாக அவற்றைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 


எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழகத்திற்குச் சொந்தமான பல இடங்களை ஏற்கனவே படிப்படியாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் கேரளா, தற்போது முழுமையாக அவற்றைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதற்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மின்னணு மறுஅளவை (Digital Re-Survey) செய்து, தமிழகத்திற்குச் சொந்தமான கிராமங்களை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு கேரள அரசு முயற்சித்து வருவதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போட்ட திமுக அரசு.. டிடிவி.தினகரன் விளாசல்..!

கேரளாவின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இருமாநில எல்லை பகுதியில் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட்டு சர்வே செய்வதற்கு அப்போது தமிழகத்துடன் ஒத்துழைக்காத கேரளா,  இப்போது தமிழகத்தின் அனுமதியின்றியே இந்த அளவீட்டு பணியை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.

எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழகத்திற்குச் சொந்தமான பல இடங்களை ஏற்கனவே படிப்படியாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் கேரளா, தற்போது முழுமையாக அவற்றைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

இதையும் படிங்க;- திமுக, அதிமுக அண்ணன், தம்பி.. டிடிவி.யை சந்திக்க வாய்ப்பு இருந்தால் சந்திப்பேன்.. ஓபிஎஸ் சரவெடி..!

ஆனால், கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த அத்துமீறலை தடுத்து நிறுத்தாமல் தி.மு.க அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கை. இந்த முறை தமிழகத்தின் நிலங்களும் பறிபோய்விடுமோ?

ஆனால், கடந்த 1ஆம்தேதி முதல் நடைபெறும் இந்த அத்துமீறலை தடுத்து நிறுத்தாமல் தி.மு.க அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கை. இந்த முறை தமிழகத்தின் நிலங்களும் பறிபோய்விடுமோ? (4/5)

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

 

ஸ்டாலின் அரசு விழித்துக்கொள்ளுமா? இல்லை தமது கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவிற்காக தமிழக நிலப்பகுதியை தூங்குவது போல நடித்து விட்டுக்கொடுக்கப்போகிறார்களா? என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  துரைமுருகனின் துச்சாதனன் புத்தி இன்னும் மாறவில்லை.. தெலுங்கு பட வில்லன் போல பேசும் பொன்முடி.. TTV விளாசல்.!

click me!