தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு உறசாக வரவேற்பு அளிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு உறசாக வரவேற்பு அளிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் தமிழ்மொழியைப் புகழி லேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசையென்னாற் கழிந்த தன்றே! என்று மகாகவி பாரதி வியந்து பாடியது, பாரதப் பிரதமருக்கும் அழகாய்ப் பொருந்துகிறது. தமிழ் மொழியின் மேன்மையை உலகமெங்கும் பெருமையோடு பரப்பும் உன்னதத் தலைவர்.
இதையும் படிங்க: கோவையில் நடந்தது சிலிண்டர் விபத்து என்று இனியும் ஏமாற்ற முடியாது… அண்ணாமலை ஆவேசம்!!
நம் பாரதப்பிரதமர் தமிழகம் வரும்போது எல்லாம், தாய் மண்ணுக்கு திரும்பி வரும் தனி உற்சாகத்துடன் வருகிறார். அவர் தமிழ் மண்ணில் கால் பதிக்கும் போதெல்லாம் பெருமிதம் கொள்வதை நம்மால் உணரமுடியும். நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இம்முறை திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தருகிறார். தமிழகம் வருகைதரும், நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி முதலில் மதுரை விமான நிலையம் வருகிறார்.
இதையும் படிங்க: தமிழக எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரளா.! கை கட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசு- இறங்கி அடிக்கும் சீமான்
பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வருகிறார். பாரதப் பிரதமரின் வருகையினால் தென் தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் வரும் வழியில், ஏராளமான பொதுமக்கள் வழி நெடுகிலும் உற்சாகமான வரவேற்பு கொடுக்கின்றனர். ஆடலும், பாடலும், ஆரவார மேளமும், தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளத்தில் தமிழானாக உயர்ந்து நிற்கிறேன் என்று பெருமையுடன் கூறும் நம் பாரதப்பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார்.