மத்திய அரசை குறை சொல்லியே இந்த விஷயத்தில் சாதித்த தமிழகம். செம்ம பிளான்.. 5.2 கோடி பேருக்கு தடுப்பூசி.

By Ezhilarasan Babu  |  First Published Oct 9, 2021, 9:44 AM IST

சாலையோரத்தில் இருப்பவர்களுக்கும், 1761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நரிக்குறவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விதமாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மெரினா கடற்கரையில் பல ஆண்டுகளாக இரவில் தங்கி வருவதால், அவர்களுக்கு தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.


தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 233 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை சென்னை மெரினா கடற்கரையில் இன்று தொடங்கி வைத்த அவர் இவ்வாறு கூறினார். முதல் அலையைக் காட்டிலும் கொரோனா இரண்டாவது அலை மிகத்தீவிரமான தாக்குதலை நடத்தியது. அதில் ஏராளமான  மனித உயிர்கள் பலியான நிலையில், நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி, செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு.. வாரி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி பிற மாநிலங்களை காட்டிலும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நரிக்குறவர்களுக்கு குரலா தடுப்பூசி செலுத்தும் முகாமினை சென்னை மெரினா கடற்கரையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் எல்லா நிலைகளிலும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 633 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் 64 சதவீதம் பேருக்கும் முதல் தவணை தடுப்பு செலுத்தப்பட்டுள்ளது, இதில் 22 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 

அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி என்ற முறையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கர்ப்பிணிகளுக்கு அதிக அளவில் தடுப்பு செலுத்தப்பட்டுள்ளது. 4  லட்சத்து 80 ஆயிரத்து 875 கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 லட்சத்து 80 ஆயிரத்து 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும், சாலையோரத்தில் இருப்பவர்களுக்கும், 1761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நரிக்குறவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விதமாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி மெரினா கடற்கரையில் பல ஆண்டுகளாக இரவில் தங்கி வருவதால், அவர்களுக்கு தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். 

இதையும் படியுங்கள்: நிலக்கரி காணாமல் போன விவகாரம்.. அறிக்கை வந்தவுடன் ஆட்டம் ஆரம்பம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி.

ஆரம்பம் முதலே கொரோனா தடுப்பூசி வரத்தில் தொய்வு உள்ளது என மத்திய அரசை குறை கூறியதுடன், தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி, கொரோனா தடுப்பூசிகளை பெற்று வந்த தமிழக சுகாதாரத்துறை இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்க்கு  5 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 233 பேருக்கு கொரோனா தடுப்பூசி  செலுத்தியிருப்பது குறிப்பிடதக்கது. 

click me!