இனி பேமலியோட போலாம், வரலாம்.. போலீசாருக்கு ‘குட்’ நியூஸ்

Published : Oct 09, 2021, 07:22 AM IST
இனி பேமலியோட போலாம், வரலாம்.. போலீசாருக்கு ‘குட்’ நியூஸ்

சுருக்கம்

இனி காவல்துறையினர் குடும்பத்தினருடன் முக்கிய விழாக்களுக்கு செல்ல விடுமுறை வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லி: இனி காவல்துறையினர் குடும்பத்தினருடன் முக்கிய விழாக்களுக்கு செல்ல விடுமுறை வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லி காவல்துறையினரை மகிழ்விக்கும் இந்த உத்தரவை காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் உள்ள காவல்துறை பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பிறந்த நாள், திருமண விழாக்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு செல்ல விடுமுறை அளிக்கப்படும்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 80 ஆயிரம் போலீசார் முக்கிய நிகழ்வுகளை குடும்பத்துடன் கொண்டாடலாம்.

இனி பிறந்த நாள்,திருமண நாள், வாழ்க்கை துணைவரின் பிறந்த நாள், குழந்தைகளின் பிறந்த நாள் ஆகியவற்றுக்கு ஒருநாள் விடுமுறை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்
நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்