கல்விக் கடன் வாங்குவதில் தனியார் வங்கிகள் அலட்சியம்…. பொறுமைக்கும் எல்லை உண்டு என எச்சரிக்கும் சு.வெங்கடேசன்…

By manimegalai aFirst Published Oct 8, 2021, 10:22 PM IST
Highlights

கல்விக் கடன் வழங்குவதில் ஒரு சில வங்கிகள் உதாசினப்படுத்துகின்றனர். அப்படி செய்பவர்களை சும்மா விடமாட்டோம் என சு.வெங்கடேசன் எச்சரித்தார்.

கல்விக் கடன் வழங்குவதில் ஒரு சில வங்கிகள் உதாசினப்படுத்துகின்றனர். அப்படி செய்பவர்களை சும்மா விடமாட்டோம் என சு.வெங்கடேசன் எச்சரித்தார்.

 

மதுரையில் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கு பணிகளை கண்காணிக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கல்விக் கடன் வழங்கப்படுவது குறித்து விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், கல்விக் கடனுக்காக விண்ணப்பித்த 818 பேரில், 625 நபர்களுக்கு ரூ.52.27 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். 164 விண்ணப்பங்கள் பரிசீலனையிலும், 64 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டும் உள்ளன. மதுரையில் அடுத்த வாரம் கல்விக் கடன் மேளா நடத்த திட்டமிடப்பிடப்பட்டுள்ளது. அதில் அனைத்து வங்கிக் கிளைகளும் பங்கேற்று தேவையான மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் முன்மாதி நிகழ்வாக நடைபெறவுள்ள கடன் மேளாவில் பங்கேற்கும் தனியார் வங்கிக் கிளைகள் கவுரவிக்கப்படும். ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காத தனியார் வங்கிகள் குறித்து விசாரணை நடத்தவுள்ளோம். ஒரு சில தனியார் வங்கிகள் கல்விக் கடன் கேட்கும் மாணவர்களை உதசீனப்படுத்துவதாக புகார்கள் வருகின்றன. இதனை பொறுத்துக்கொள்ள மாட்டோம். ஒரு மாணவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் சம்மந்தப்பட்ட வங்கியை சும்மா விடமாட்டோம் என்றும் சு.வெங்கடேசன் எச்சரித்துள்ளார்.

click me!