மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்.. அடிச்சுத் தூக்கிய சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி.. பின்னடைவை சந்தித்த பாஜக.!

By Asianet TamilFirst Published Oct 8, 2021, 9:24 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. 
 

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று குறைந்த நிலையில், உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது. நாக்பூர், அகோலா உள்பட 6 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 85 வார்டுகளுக்கும், 37 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 144 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் அதன் முடிவுகள் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி 85 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் பா.ஜ.க 22 இடங்களில் வெற்றி பெற்றது.  காங்கிரஸ் 19, தேசியவாத காங்கிரஸ் 15, சிவசேனா 12 என 46 வார்டுகளில் மகா விகாஸ் அகாதி வெற்றிபெற்றுள்ளது. எஞ்சிய இடங்களை பிற கட்சிகளும் சுயேட்சைகளும் வெற்றி பெற்றன. 
இதேபோல ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 144 வார்டுகளில் காங்கிரஸ் 36 இடங்கள், சிவசேனா 23 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 18 இடங்கள் என மொத்தம் மகா விகாஸ் அகாதி கூட்டணி 77 இடங்களை கைப்பற்றியது. பாஜக 33 வார்டுகளில் வெற்றி பெற்றது. எஞ்சிய இடங்களை சுயேட்சைகள் பிற கட்சிகள் வென்றன.  மாவட்ட ஊராட்சிகளில் மகா விகாஸ் அகாதி கூட்டணி முன்பு 37 வார்டுகளையே வென்றது. தற்போது 46 இடங்களாக அது உயர்ந்துள்ளது. முன்பு 31 வார்டுகளை வென்ற பாஜக, தற்போது 22 வார்டுகளையே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!