ஏற்கனவே தமிழகத்தை இரண்டாக பிரித்தாச்சு.. திரும்பவும் எதுக்கு பிரிக்கணும்.? மத்திய அமைச்சர் பொளேர்.!

By Asianet TamilFirst Published Jul 7, 2022, 7:22 AM IST
Highlights

தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பாஜக சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் நிர்வாக வசதிக்காக  தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது போல் மாநில அரசின்  நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை ஆந்திரா போன்று இரண்டாகப் பிரிக்க வேண்டும்.  அவ்வாறு செய்ய முடியாது என்று நினைத்துவிடாதீர்கள், செய்யக்கூடிய இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்..! ஆ.ராசாவிற்கு டஃப் கொடுக்கும் நயினார் நாகேந்திரன்

 நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. சமூக ஊடகங்களில் திமுகவினர் நயினார் நாகேந்திரனை விமர்சித்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில்  மோடி அரசின் 8 ஆண்டுகால சாதனைகளை எடுத்துச்சொல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சரை பாஜக நியமித்துள்ளது. திருநெல்வேலி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் வி.கே. சிங், திருநெல்வேலிக்கு வந்திருந்தார். அங்கு நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதையும் படிங்க: ஆட்சியை பிடிக்க முடியாது என்ற விரக்தியில் தமிழகத்தை துண்டாட நினைப்பதா.? பாஜகவை விளாசிய கே. பாலகிருஷ்ணன்!

அப்போது தமிழ்நாடு பிரிப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரன் சொன்ன கருத்து பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வி.கே. சிங், “ஏற்கனவே தமிழகத்தில் இருந்துதான் ஆந்திரா பிரிக்கப்பட்டது. எனவே, இனி தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்று பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், “குடும்ப ஆட்சி போல் நடத்தாமல் பிரதமர் மோடி மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. இருந்தாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பது மக்களின் கையில்தான் உள்ளது. அதிமுகவில் நிலவி வருவது உட்கட்சி பிரச்சனை. இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.” என்று வி.கே. சிங் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நான்கு நியமன எம்.பி.க்களும் தென்னிந்தியர்கள்.. பாஜகவின் ‘ஆப்ரேஷன் லோட்டஸ்’ தென்னிந்தியாவில் தொடங்கியதா?

click me!