பெண்கள் விவகாரத்தில் ஜெயக்குமார் எப்படிப்பட்டவர் தெரியுமா? ரகசியத்தை உடைத்த கோவை செல்வராஜ்..!

By vinoth kumar  |  First Published Jul 7, 2022, 6:33 AM IST

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகுதி தராதாரம் இல்லாதவர். அவர் சர்க்கஸ் கம்பெனி கோமாளி, இன்னொருவர் குடிகார கோமாளி சி.வி சண்முகம் இருவரும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ் பற்றி தேவையின்றி பேசி வருகிறார்கள்.


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகுதி தராதாரம் இல்லாதவர். அவர் சர்க்கஸ் கம்பெனி கோமாளி. இன்னொருவர் குடிகார கோமாளி சி.வி சண்முகம் இருவரும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ் பற்றி தேவையின்றி பேசி வருகிறார்கள் என கோவை செல்வராஜ் ஆவேசமாக கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், வரும் ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மறுபுறம் இதனை தடுக்க ஓபிஎஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த போதிலும் தோல்வியில்  முடிவடைந்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சவால் விட்டீங்களே எதையாவது உருப்படியா செஞ்சீங்களா? திமுகவை திக்கு முக்காட செய்யும் அண்ணாமலை..!

undefined

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை செல்வராஜ்;- கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டு அழைப்பிதழ் வந்தது, தற்போதைய அழைப்பிதழில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பெயர் இல்லை. தலைமை கழகம் பெயரில் உள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெற இருப்பது பொதுக்குழு அல்ல. அது எடப்பாடி பழனிசாமிக்கு துதிபாடுகிற கூட்டம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகுதி தராதாரம் இல்லாதவர். அவர் சர்க்கஸ் கம்பெனி கோமாளி, இன்னொருவர் குடிகார கோமாளி சி.வி சண்முகம் இருவரும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ் பற்றி தேவையின்றி பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க;-  செந்தில் பாலாஜி கையில் 40 எம்.எல்.ஏக்கள்.. மகாராஷ்டிராவை போல் தமிழகத்தில் அது நடக்கும்? அலறவிடும் பிரமுகர்.!

உதவிகேட்டு வந்த பெண்களை மானபங்கப்படுத்தியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் இருக்கவேண்டியவர். எடப்பாடி ஆட்சி இருந்த காரணத்தாலும், அமைச்சராக இருந்த காரணத்தாலும் இவர் மீது வழக்குப்போடவில்லை. தொடர்ந்து இவர் பேசுவார் என்றால் அவர் செய்கிற தவறுகளுக்கு வழக்கு தொடுத்து சிறைக்கு அனுப்பப்படுவார் என்பதை ஜெயக்குமாருக்கு எச்சரிக்கையாகவே தெரிவித்துக்கொள்கிறோம். 

எடப்பாடி அதிமுகவின் கட்சித் தலைவர் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் தான் கட்சித் தலைவர் அவர்கள் போடுவது பெரும் டிராமா. கொடநாடு வழக்கில் 4 ஆண்டு காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. உரிய முறையில் கடந்த அதிமுக ஆட்சியில் விசாரணை நடைபெறவில்லை. கொடுநாடு வழக்கில் தவறு செய்தவர்களை முதல்வர் ஸ்டாலின் விரைந்து கண்டு பிடித்து தண்டனை வாங்கி தர வேண்டும். கொடநாடு வழக்கில் 4 வருடமாக காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. உரிய முறையில் கடந்த அதிமுக ஆட்சியில் விசாரணை நடைபெறவில்லை. கொடுநாடு வழக்கில் தவறு செய்தவர்களை முதல்வர் ஸ்டாலின் விரைந்து கண்டு பிடித்து தண்டனை வாங்கி தர வேண்டும் என கோவை செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க;- இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !

click me!