அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே அதிகார மோதல் உச்சம் பெற்றுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி தரப்பினர் மீண்டும் பொதுக்குழு வரும் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: எஸ்.பி வேலுமணியின் வலது கரம் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..! அலறும் இபிஎஸ்
இந்த நிலையில் உச்ச நீதிமன்றமும் பொதுக்குழுவிற்கு தடையில்லை என தெரிவித்துள்ளது. இதனால் பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். மேலும் 1000 கோடி ரூபாய் செலவிட உள்ளார் என பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை..! ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்
கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையேயான உரசல், சாதி ரீதியிலான பிரச்சனையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி உள்ளது. இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28 ஆம் தேதி மனு அனுப்பியும், பதில் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.