தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக மக்களே, அதிகாரம், பணபலம் மற்றும் பதவியில் இருக்கும் திமுக அரசின் பலத்துக்குச் சட்டம் வளைந்து கொடுக்கக் கூடாது என்ற சாமானிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்திய சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பதவிப் பிரமாணத்தை மீறியதற்காக தமிழக அரசு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயலாகும் என்றும், அதிகாரத்தில் உள்ள ஒருவர் அடாவடித்தனமான பேச்சின் ஆபத்தை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியது.
On behalf of and the people of Tamilnadu, we thank the Honourable Madras High Court for reaffirming the faith of the common man that the law shouldn’t bend to power, money & the muscle power of the incumbent DMK Government.
The Hon Madras High Court has…
திமுகவின் பழமையான பிரிவினைவாத அரசியலைக் கடைப்பிடிக்காமல், மது, ஊழல் மற்றும் பிற சமூகத் தீமைகளை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் மனநிலையை சென்னை உயர்நீதிமன்றம் பிரதிபலித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக காவல்துறை ஊழல் திமுகவின் கட்டளைப்படி செயல்படுவதை நிறுத்திவிட்டு, இழந்த நற்பெயரை மீண்டும் நிலைநிறுத்த நியாயமான முறையில் செயல்பட வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..