டார்க்கெட் செய்யப்படும் தமிழக பாஜக நிர்வாகிகள்.. இதற்கெல்லாம் அஞ்சப்போதில்லை.. எல்.முருகன்..!

By vinoth kumarFirst Published Nov 5, 2023, 3:15 PM IST
Highlights

 நெல்லையில் தலித் மக்களின் மேல் சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் இப்போது நடந்திருக்கிறது. 

திமுக அரசாங்கத்தில் எந்த மக்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்;- கோவை, திருப்பூர் பகுதிகளில் ஜவுளித்துறையை நம்பி பல லட்சம் மக்கள் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணத்தை உயர்த்தி ஒட்டுமொத்த தொழிலையும் நலிவடைந்த சூழலுக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கு காரணம் திமுகவின் மின்சார கட்டண உயர்வு தான் காரணம் என குற்றம்சாட்டினார். 

சிறு குறு தொழிற்சாலைகள் மட்டுமின்றி வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது பொதுமக்களை பெரும் அளவு பாதித்துள்ளது. மின்சார கட்டணத்தின் மூலம் கொள்ளை அடிக்கும் அரசாங்கமாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகள் உள்ள தொழிற்சாலைகள் ஸ்தம்பித்துள்ளன. இதற்காக காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதற்கு தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

திமுக அரசாங்கத்தில் எந்த மக்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. நெல்லையில் தலித் மக்களின் மேல் சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் இப்போது நடந்திருக்கிறது. நெல்லையில் பள்ளி மாணவர்கள் தாக்கப்பட்டார்கள். சேலத்தில் திமுகவினர் தலித் மக்களை தாக்கினார். அப்போதும் நடவடிக்கை இல்லை. திமுக அரசு தலித் மக்களை வஞ்சிக்காமல் அவர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

மேலும், ஒரே சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்றாலும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் கொல்லப்படுகின்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். திமுக அரசு பாஜக நிர்வாகிகளை குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பாஜக எப்பொழுதும் அஞ்சப்போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெட்ரோல் விலை, டீசல் விலை குறைப்பு குறித்து திமுக தேர்தல் வாக்குறுதிகள் கூறியதை நிறைவேற்றவில்லை. ஆளுநர் என்பவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உச்சநிலையில் இருப்பவர். ஆளுநர் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அவருடைய அலுவலகத்தில் பாதுகாப்பாற்ற சூழல் உள்ளது. இதை மூடி மறைக்கின்றனர். இதன் பின்னணி யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்தார்.

click me!