கர்நாடகா மாநில துணைமுதல்வர் டி.கே.சிவக்குமாருக்கும், ஜோதிமணிக்குமான தொடர்பு என்ன என்பது எனக்கு தெரியும் என பாஜக மாநிலத் தலைவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாகலாந்து மாநிலம் அழகான மாநிலம். அங்குள்ள மக்கள் அற்புதமானவர்கள். ஆனால் அவர்கள் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என்றும், தமிழகத்தில் உள்ளவர்கள் உப்பு போட்டு சாப்பிடுவர்கள் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அவமானப்படுத்தியுள்ளார்.
அவரை தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. அவர் தொடர்ச்சியாக பொறுக்கிப் போன்று, ஆளுநரையும் என்னையும் தரம் தாழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இவர் மீது தமிழகத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், நாகலாந்தில் யாராவது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், 153A என்ற சட்டப்பிரிவில் அவரை ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு கைது செய்து நாகலாந்து அழைத்துச் சென்றுவிடலாம்.
undefined
மின்வாரியத்தின் அலட்சியத்தால் துடி துடித்து இறந்த 2 குழந்தைகள்; குடிசை வீட்டில் நிகழ்ந்த பரிதாபம்
தமிழகத்தில் காவல்துறையின் கவனம் சிதறி போயிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதனை நான் தொடர்ந்து கூறி வருகின்றேன். தமிழக காவல்துறையை பொறுத்தவரை பாரதி ஜனதா கட்சியின் கொடி கம்பத்தை அகற்ற வேண்டும், பிஜேபிகாரர்களை பிடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பேருந்தில் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு போவதை ஓட்டுநரும் கேட்கவில்லை, நடத்துனரும் கேட்கவில்லை. வேறு யாரும் கேட்கவில்லை. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண்மணி சமூக அக்கறையுடன் கேட்டுள்ளார். அவர் நடந்து கொண்ட விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் கேட்டது நியாயம். நீதிபதி அதனை பார்த்து தான் அவருக்கு பெயில் கொடுத்துள்ளார். பள்ளி மாணவர்களை அமர வைத்து ரெக்கார்ட் டான்ஸ் போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் திமுகவினர்.
என்னங்க வைத்தியம் பாக்குறீங்க? ஜிப்மரில் மருத்துவர்களை லெப்ட் ரைட் வாங்கிய அதிமுக செயலாளர்
தமிழகத்தில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் நாங்கள் மக்களை சென்று சந்தித்து வருகிறோம். எல்லா இடங்களிலும் கூட்டமாக மக்கள் எங்களுக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நான் காங்கிரஸ் கட்சிகாரனை கேட்கிறேன். ஏதாவது ஒரு ஊரகப் பகுதிகளில் கூட்டத்தை கூட்டி காட்டுங்கள். ஜோதிமணி கரூர் நாடாளுமன்ற தொகுதிக்காக என்ன கொண்டு வந்துள்ளார் என்ற கேள்வி கேட்டால் அதனை விளக்குவது அவருடைய கடமை அதை விட்டுவிட்டு எப்படி வேண்டுமானலும் பேசகூடாது.
டி.கே.சிவகுமாருக்கும் ஜோதிமணிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பது எனக்கு தெரியும். நான் அதை எல்லாம் பேச விரும்பவில்லை. ஜோதிமணி, டி.கே.சிவகுமாரிடமிருந்து எப்படி பணத்தை வாங்கி வந்து இங்கு செலவு செய்தார் என்கிற எல்லா விபரங்களும் எனக்கு தெரியும். ஜோதிமணி ஒரு பெண் என்பதால் நான் விட்டு வைக்கிறேன். தரம் தாழ்ந்து இறங்கிப் பேச விரும்பவில்லை என தெரிவித்து கடந்து சென்றார்.