சர்ச்சையில் சிக்கிய லியோனி..முட்டுக்கட்டை போடும் பாஜக.. விரைவில் கைதா ? பரபரப்பு !

By Raghupati RFirst Published May 21, 2022, 3:55 PM IST
Highlights

dindigul leoni : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடி பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில்  நடைபெற்றது .

இதில் தலைமைக்கழக கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர்  திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசுகையில், 'பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டு வெட்டியாக இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி பெண்களுக்கு ஓட்டுரிமைவாங்கித் தந்தது நீதிக் கட்சி என்றும் பெண்களுக்கு சொத்துரிமை வாங்கித்தந்தது கலைஞர் என்றும் பெண்களுக்கு அரசியலில் 50% இட ஒதுக்கீடு வழங்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

பெண் விடுதலைக்கு பாடிய பாரதியார் பாரதிதாசன்  வழியில் ஆட்சி நடத்தி வருபவர் ஸ்டாலின் என்றும் செங்கோட்டை அருகே டெல்லியில் அறிவாலயத்தை நிறுவிய தலைவர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் கை காட்டுபவரே  பிரதமர் ஆவார் என்பதற்கு அதுவே ஒரு  எடுத்துக்காட்டாக உள்ளது  என்றும் கூறியுள்ளார். இல்லம் தேடி கல்வி,  மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு சம உரிமை என பல சாதனைகளையும் மக்கள நலத் திட்டங்களையும் வழங்கிக் கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி. 

செருப்பைத் தலையில்  தூக்கிக் கொண்டு இருந்த  சமுதாயத்தை மேயராக்கி வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர் அவர்களே என அழைக்க வைத்து  திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்' என்று திண்டுக்கல் லியோனி பேசினார். லியோனியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.இந்நிலையில் பாஜகவின் பட்டியலின அணியின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திண்டுக்கல் லியோனி மீது புகார் ஒன்றை கொடுத்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த  ‘19-ஆம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்  தி.மு.க.சார்பில் கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றதை சமூக வலைதளங்களில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.இதில் தலைமைக் கழக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பட்டியலின  சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் கொச்சையாக பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டியலின மக்கள் குறித்து எம்.பி தயாநிதி மாறன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியை தொடர்ந்து லியோனியும் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதாக தெரிவித்துள்ளார்.எனவே உடனடியாக  திண்டுக்கல் ஐ லியோனி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தன் மனைவி என நினைத்து அடுத்தவன் பொண்டாட்டியை கொன்ற குடிகாரன்.! வெளியான CCTV காட்சிகள் -அதிர்ச்சி !

இதையும் படிங்க : உதயநிதி அமைச்சர் இல்லை..அடுத்த முதல்வரே அவர்தான்.! அடேங்கப்பா! - திமுகவில் சலசலப்பு

click me!