ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ? நம் இனத்தை அழித்ததே அவர்தான்.! பொங்கி எழுந்த சீமான்

By Raghupati RFirst Published May 21, 2022, 3:28 PM IST
Highlights

Rajiv Gandhi : ராகுல் காந்தி தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க ? நாங்கள்தான் உங்களை மன்னித்தோம்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணி நிரந்தரம் என்ற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம். 6 ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து, பட்டினப்பாக்கத்தில் இருக்கும் CMWSSB தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உங்கள் போராட்டத்திற்கு எப்பொழுதும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தூய்மை இந்தியாவை பற்றி பேசுகிறோம். ஆனால்,  இங்கு தூய்மை பணியாளர்களுக்கு எந்தவொரு உரிமையையும் இல்லை. தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், சம்பள உயர்வு வேண்டியும் தொடர்ந்து 6வது நாளாக போராடி வருகின்றனர். இதுவரை காண்ட்ராக்டர்கள் ஏதுமின்றி அரசே சம்பளம் கொடுத்து வந்ததால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது என்றும், தற்போது தரகர்கள் மூலம் சம்பளம் வழங்கி வருவதால், பணியாளர்களுக்கு முறையான ஊதியம் கிடைக்கவில்லை என்றார். 

இந்நிலையில் தங்களின் உரிமைக்காக போராடி வருவோர்களை மதிக்கவில்லையின்றாலும் பரவாயில்லை ஆனால் மிதிக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்தாலும் தூய்மை படுத்தும் வேலையை, மனிதர்கள் தான் செய்கின்றனர். அத்தகைய அற்பனிப்போடு பணி செய்துவரும் அவர்களுக்கு முறையான சம்பளம், நிரந்தரம் ஆகியவை கிடைப்பதற்கு முதல்வர் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

7பேர் விடுதலைக்காக யாரும் போராடவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது விடுதலைக்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு தமிழ் தேசிய உணர்வாலர்கள் தான் அவர்களின் விடுதலைக்காக போராடினார்கள். பேரறிவாளன், அவருடைய அம்மா மற்றும் அவரும் பல்வேறு வழக்குகளை ஆராய்ந்து, சட்டங்களை தெரிந்துகொண்டு வழக்கில் வெற்றி பெற்று விடுதலையாகியுள்ளார்.

ராகுல் காந்தி தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க ? நாங்கள்தான் உங்களை மன்னித்தோம். ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ?  ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : தன் மனைவி என நினைத்து அடுத்தவன் பொண்டாட்டியை கொன்ற குடிகாரன்.! வெளியான CCTV காட்சிகள் -அதிர்ச்சி !

இதையும் படிங்க : உதயநிதி அமைச்சர் இல்லை..அடுத்த முதல்வரே அவர்தான்.! அடேங்கப்பா! - திமுகவில் சலசலப்பு

click me!