அண்ணாமலைக்கு சுகர் இருக்கலாம்... டாக்டர் சொன்னதால் நடை பயணம் போகிறார்- இறங்கி அடிக்கும் எஸ்.வி.சேகர்

By Ajmal Khan  |  First Published Jul 16, 2023, 9:09 AM IST

விஜய் அரசியலுக்கு வந்தால் நமக்கு ஓட்டு பாதிக்கப்படுமே,  நமக்கு பிரச்சனை வருமே என்று நினைப்பவர்கள் மட்டுமே விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்பார்ப்பார்கள் என பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 


விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பவர்கள் யார்.?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலையின் நடை பயணம் தொடர்பாக கடுமையாக விமர்சித்த அவர், நடைபயணத்தால் எந்த வித பிரயோஜனமும் இல்லையென தெரிவித்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகியான எஸ்.வி.சேகர் கூறுகையில், நடிகர் விஜய் இரவு நேர பயிலகம் திறந்து இருப்பது வரவேற்கத்தக்கது. அரசியலுக்கு வருபவர்கள் காமராஜரின் வழியை பின்பற்றினால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என யாரும் சொல்ல முடியாது. விஜய் அரசியலுக்கு வந்தால் நமக்கு ஓட்டு பாதிக்கப்படுமே,  நமக்கு பிரச்சனை வருமே என்று நினைப்பவர்கள் மட்டுமே விஜய் அரசியலுக்கு வருவதை எதிர்பார்ப்பார்கள் எனவும் கூறினார்.

Latest Videos

undefined

அண்ணாமலைக்கு சுகர் இருக்கலாம்

இந்திய குடிமகனாக விஜய் உள்ளார். எத்தனையோ லட்சம் ரசிகர்களை வைத்துக்கொண்டு, ரசிகர்களை கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ள விஜய் சரியான நேரத்தில் அரசியலுக்கு வந்தால் வெற்றி கிடைக்கும். புதிதாக யாரும் அரசியலுக்கு வந்தால் வெளியில் இருந்து புதியதாக ஓட்டு வருவதில்லை. தற்போது உள்ள அரசியல் கட்சிகளின் ஓட்டுகள் தான் பிரிந்து செல்லும். அதனால் அனைத்து அரசியல் கட்சிக்கும் தான் பாதிப்பு ஏற்படும். எனக்குத் தெரிந்து புதிதாக பிராமணர்கள் கட்சி ஆரம்பிக்க உள்ளனர். எனவே பிராமணர்களின் ஓட்டு அங்கே தான் செல்லும் என கூறினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொள்ள இருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணாமலைக்கு சுகர் இருக்குமோ என்று தெரியவில்லை,  தினமும் நடக்க வேண்டுமென டாக்டர் கூறி இருக்கலாம். நடை பயணத்தால்  எந்த வித பிரயோஜனமும் இல்லை.

மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்

சும்மா மிஸ்டு காலை வைத்துக் கொண்டு எங்களிடம் இத்தனை பேர் உள்ளனர் என்று கூறுவதெல்லாம் நாமலே நம்மை புகழ்ந்து கொள்வது போன்றது எற கூறினார். தற்போது நடைபெறுகின்ற ஆப்ரேஷன் தேர்தல் முடிவான போஸ்ட் மார்டத்தில் தெரிந்து விடும் என விமர்சித்தார்.  பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரதமர் மோடி இந்தியாவில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெற்றாலும் வெற்றி பெறுவது உறுதி, 300 இடங்களுக்கு மேல் பெற்று மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் ஆனால் இது அண்ணாமலை உதவிவாக கிடையாது என கூறினார்.

இதையும் படியுங்கள்

2 கோடி பெண்களுக்கு கூட மகளிர் உரிமைத்தொகை வழங்க முடியலைனா திமுக அரசு ராஜினாமா செய்யட்டும்- ஜி.கே.வாசன் ஆவேசம்

click me!