தினகரனுக்கு கிடைத்தது குக்கர் சின்னம்... பொங்கல் பரிசு கொடுத்த உச்சநீதி மன்றம்!! அமமுகவினர் கொண்டாட்டம்

By sathish kFirst Published Jan 15, 2019, 7:09 PM IST
Highlights

திருவாரூர் இடைத்தேர்தலில் ‌குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதை விசாரணைக்கு வந்த இந்த வழக்கின்  தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கிறது.

ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் தினகரன்.

தற்போது கருணாநிதி மறைவைத்தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம்  அறிவித்தது.  

இந்நிலையில் ஜனவரி 28ல் நடக்கவிருந்த திருவாரூர் இடைத்தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு, குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி  தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்து. தேர்தல் நெருங்குவதால் (தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு )இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி, கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குக்கர் சின்னமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி பெயரும் டிடிவி  தினகரனுக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. பொங்கல் பரிசாக தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியான நிலையில் அமமுக கொண்டாட்டத்தில் உள்ளனர்.

click me!