அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?

By Raghupati RFirst Published Aug 17, 2022, 10:09 PM IST
Highlights

தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்தன.

அண்மையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்த சந்திப்பின் போது அரசியல் பேசினோம். ஆனால் அதனை வெளிப்படையாக கூற முடியாது என்று தெரிவித்தார். 

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்தன. நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் மிகமுக்கிய மனிதர். தமிழ்நாட்டின் பிரச்னைகளுக்காக பலமுறை குரல் கொடுத்துள்ளார். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, ரஜினியை சந்தித்ததில் எந்தத் தவறும் இல்லை' என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு..“முதல்வரின் வளர்ப்பு.. நான் ஏமாறமாட்டேன் ” ராஜினாமா கூட! எமோஷனல் ஆன அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆளுநர் சந்திப்பை முடித்துவிட்டு வந்து, செய்தியாளர்களிடம் பேசும்போது, நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை புகழ்ந்து பேசினார். ‘மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.. 30 நிமிடம் பேசினேன். அரசியல் விஷயமும் அவரிடம் பேசினேன். அவர் காஷ்மீரில் பிறந்து, வடமாநிலங்களிலேயே இருந்தவர். ஆனால், தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார்.. முக்கியமாக தமிழக மக்கள், அவர்களது நேர்மை, கடின உழைப்பு இதெல்லாம் ஆளுநருக்கு மிகவும் பிடித்துவிட்டது. 

இங்கே உள்ள ஆன்மீக உணர்வு அவர் மிகவும் நேசிக்கிறார்.. தமிழகத்தின் நல்லதுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று ஆளுநர் சொல்லி உள்ளார். தமிழக ஆன்மீக உணர்வு ஆளுநரை ஈர்த்துள்ளது’ என்று பேசினார்.திமுகவுடன் ஆளுநருக்கான உரசல் அதிகமாகி உள்ள நிலையில், ஆளுநரின் தொடர் வெறுப்பரசியல் பேச்சால், திமுக கூட்டணி கட்சிகள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், ஆளுநர் ரவி மீதான இமேஜை உயர்த்தி ரஜினி பேசியிருந்தது, பல்வேறு தரப்புக்கு கடுப்பை ஏற்படுத்தியிருந்தது. 

மேலும் செய்திகளுக்கு..டெல்லியில் சந்தித்த அந்த 3 பேர்.. அதிமுகவுக்கு டஃப் கொடுத்த ஸ்டாலின் - திமுக Vs அதிமுக தொடரும் மோதல்

இந்நிலையில்  வெறுப்பை பாஜகவுக்கு சாதகமாக அறுவடை செய்ய பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக ஆதரவு தரவில்லை என்றாலும், மறைமுகமாக ஆதரவு தருவார் என்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் திட்டமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

கட்சி ரீதியாக ரஜினி பேச தயங்குவதால்,   கட்சி சாராத பொதுக்கூட்டங்கள் நடத்தி,  விழாக்கள் நடத்தி அதில் ரஜினியை பேச வைத்து பலனை தேடலாம் என்றும் கருதுகிறார்கள். அல்லது ஏதாவது ஒரு சிறிய மாநிலத்தின் ஆளுநராக  அதன் மூலம் வாக்குகளை எளிதாக பிரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் இருப்பதால், இன்னும் பல திருப்பங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகளுக்கு..நாம ஜெயிச்சிட்டோம்.. குஷியில் ஓபிஎஸ்” ஆடிப்போன எடப்பாடி.. அதிமுக அதோகதியா?

click me!