நாம ஜெயிச்சிட்டோம்.. குஷியில் ஓபிஎஸ்” ஆடிப்போன எடப்பாடி.. அதிமுக அதோகதியா?

By Raghupati RFirst Published Aug 17, 2022, 8:54 PM IST
Highlights

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பில் இன்று கூறியுள்ளது.

ஜுன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை எடப்பாடி தனியாக கூட்ட முடியாது. அப்படியே கூட்டினாலும், அதற்கு ஓபிஎஸ் கையெழுத்து தேவை. இந்த இடைப்பட்ட காலத்தில் எடப்பாடியின் நியமனங்கள் எதுவும் செல்லாது என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 

துவண்டு போன அவர்களுக்கு இந்த தீர்ப்பு ஜாக்பாட்டாக அமைந்திருக்கிறது. அதேபோல எடப்பாடி தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது என்றும் கூறுகின்றனர். இனிமேல் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்துதான் எந்த ஒரு முடிவிலும் கையெழுத்து போட வேண்டும், இதில் தகராறு செய்ய முடியாது. இதில் ஒருவர் கையெழுத்து போட்டு, இன்னொருவர் கையெழுத்து போடாமல் விட்டால், அது கட்சிக்கு சிக்கலாகிவிடும். 

மேலும் செய்திகளுக்கு..“முதல்வரின் வளர்ப்பு.. நான் ஏமாறமாட்டேன் ” ராஜினாமா கூட! எமோஷனல் ஆன அமைச்சர் அன்பில் மகேஷ்

எனவே இருவரும் மீண்டும் சேர்வர்களா அல்லது எடப்பாடி பழனிசாமி தரப்பு வேறு எதையாவது செய்யுமா ? என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை பசுமைவழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பொன்னையன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. தீர்ப்பு வெளிவந்தது ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில்,  'தமிழ்நாட்டு மக்களை நம்பினேன்; இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆசிகளை நம்பினேன். 

இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது' என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் சேர்வார்களா ? அதிமுக மீண்டும் எழுச்சியுடன் செயல்படுமா ? என்பதே கடைக்கோடி அதிமுக தொண்டனின் கேள்வியாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..டெல்லியில் சந்தித்த அந்த 3 பேர்.. அதிமுகவுக்கு டஃப் கொடுத்த ஸ்டாலின் - திமுக Vs அதிமுக தொடரும் மோதல்

click me!