3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த மே மாதம் வரை 21 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக அரசு தெரிவித்திருந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின் சட்டமாக்கப்படும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.
பல்கலைக் கழகங்களுக்கு முதல்வரே துணைவேந்தராகச் செயல்படுவது உள்ளிட்ட மசோதாக்கள் உட்பட கடந்த 2020 முதல் 2020 மே 30-ம் தேதி வரை 21 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு கடந்த 2 ஆண்டுகளில் அனுப்பி வைக்கப்பட்ட 21 மசோதாக்களில் 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..ஹோட்டல் ரூமே கதி.. காதலர்களுடன் கும்மாளம் - 550 சவரன் நகையை மாடல் அழகியிடம் பறிகொடுத்த தொழிலதிபர்
6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ள விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. பல்கலைக்கழக வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் வகையிலான மசோதா, சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, கூட்டுறவுச் சங்கங்கள் பதவிக் காலத்தைக் குறைக்கும் சட்ட மசோதா, அடுக்குமாடி குடியிருப்பு உரிமை மசோதா, உள்ளிட்ட மசோதாக்கள் இன்னும் நிலுவையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துக்குதுணைவேந்தராக என் சந்திரசேகர், அழகப்பா பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தராக டாக்டர் ஜி. ரவி, திருவள்ளூவர் பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தராக டி. ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..டெல்லியில் சந்தித்த அந்த 3 பேர்.. அதிமுகவுக்கு டஃப் கொடுத்த ஸ்டாலின் - திமுக Vs அதிமுக தொடரும் மோதல்