நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து வாய்பேச முடியாத பெண் வெறிதீர பாலியல் வன்புணர்வு.. ஓடி ஒளியும் வழக்கறிஞர்.

By Ezhilarasan BabuFirst Published Aug 17, 2022, 6:54 PM IST
Highlights

கண்டமங்கலம் அருகே  மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை வழக்கறிஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. 
 

கண்டமங்கலம் அருகே  மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை வழக்கறிஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. 

இளம் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த வழக்கறிஞர் பிரபுவை விரைவில் கைது செய்துவிடுவோம் என்றும் அதற்காக தனி குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.  

கடந்த மாதம் 27ஆம் தேதி இந்த குற்றம் நடந்தும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படாத கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பாக இன்று  புதன்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படியுங்கள்: என்னை விட்டுட்டு இன்னொருத்தன் கேட்குதா... காதலியின் தொண்டையை டார் டாரா அறுத்த சைகோ காதலன்.

இது குறித்து காவல் துறையில் புகார் செய்யப்பட்டது, ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை, நடவடிக்கை கேட்டு அப்பகுதி மக்கள் சாலை மறியல் பேராட்டம் நடத்தினர். அதனையடுத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் வலுவான வலியுறுத்தலின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் குற்றவாளி பிரபு மீது வழக்கு பதிந்தனர்.

இதையும் படியுங்கள்:  படுக்கை அறையில் கள்ள காதலனுடன் கட்டிப் புரண்ட தாய்.. நேரில் பார்த்த மகன், பூட்டிய அறையில் எடுத்த பயங்கர முடிவு

ஆனால் வழக்கு பதிவு செய்து 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரையில் குற்றவாளி பிரபுவை கைது செய்யப்படவில்லை. சுதந்திரமாக சுற்றிவரும் பிரபு பதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை அவ்வப்போது கடுமையாக மிரட்டி வருகிறார்.

அதனால் விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக  பாலியல் குற்றவாளியான பிரபுவை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்திற்கு  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.முருகன், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.தமிழ்செல்வி, ஆகியோர் தலைமை தாங்கினர். இவ்வாறு மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!