ரசிகர்களை சந்திக்கும் ரஜினி..அரசியல் பிளானும் இருக்கும் போலயே - ஜெயிலர் டூ அரசியல்.!

By Raghupati RFirst Published Sep 4, 2022, 6:51 PM IST
Highlights

இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று கடந்த ஆண்டு சொன்ன ரஜினிகாந்த் இனி எப்பவுமே இல்லை என்று தனது முடிவு உறுதியாக அறிவித்து விட்டார்.

அரசியலுக்கு வரலாமா என்று ரசிகர்களிடம் ஆலோசிக்க உள்ளதாக கூறிய நடிகர் ரஜினிகாந்த், வருங்காலத்தில் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று கூறி மக்கள் மன்றத்தையும் கலைத்து விட்டார். இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று கடந்த ஆண்டு சொன்ன ரஜினிகாந்த் இனி எப்பவுமே இல்லை என்று தனது முடிவு உறுதியாக அறிவித்து விட்டார். 

மேலும் செய்திகளுக்கு..இனி எல்லாமே எடப்பாடி வசம்.. சசிகலா சொன்ன அந்த வார்த்தை - எஸ்கேப் ஆன ஆர்.பி உதயகுமார்!

ரஜினியின் இந்த அறிவிப்பு கொஞ்ச நஞ்ச அரசியல் கனவில் இருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது என்றுதான் கூற வேண்டும்.ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினாலும், அவரது ரசிகர்கள் இன்னும் அவரை விடவில்லை என்றுதான் கூற வேண்டும். சமீபத்தில் தமிழக ஆளுநரை ராஜ்பவனில் ரஜினி திடீரென சந்தித்து பேசியிருந்தார். 

அரசியல் காரணங்களுக்காக இந்த சந்திப்பு நடக்கவில்லை, ஆனால் அரசியல் பேசினோம் என்று கூறினார் ரஜினி.  இந்நிலையில் இன்று சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த்  சமூக அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.  அதனை ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ் தொடங்கி வைத்தார்.  அப்போது செய்தியாளார்களிடம்  பேசியபோது, ‘இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இந்த புனிதமான அறக்கட்டளை இன்றைக்கு நல்ல எண்ணத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்ய திறக்கப்பட்டு உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ரசிகர்களை சந்திப்பார். இந்த ரசிகர்கள் சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமைய வாய்ப்புள்ளது. ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவனிடம் தான் இருக்கிறது. ரஜினிகாந்த் ஆளுநரை அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையிலேயே சந்தித்தார்’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..இது கடைசி எச்சரிக்கை.. ராணுவம் வந்தாலும் பூட்டு போட்டுவிடுவோம்.! எச்சரித்த அன்புமணி ராமதாஸ் !

click me!