இனி எல்லாமே எடப்பாடி வசம்.. சசிகலா சொன்ன அந்த வார்த்தை - எஸ்கேப் ஆன ஆர்.பி உதயகுமார்!

By Raghupati R  |  First Published Sep 4, 2022, 5:25 PM IST

அதிமுகவை பொறுத்தவரையில் உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற தெளிவான தீர்வு தற்போது கிடைத்துள்ளது.


மதுரையில் கிறிஸ்டல் சமூக அமைப்பின் தொடக்க விழா பூங்கா முருகன் கோவில் உள்ள சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பத்து பேருக்கு சிறப்பு விருந்தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் வழங்கினார்.  பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர். பி. உதயகுமார், ‘முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும், பேபி அணையை சீரமைத்த பின் 152 அடி நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அம்மா பெற்றுத்தந்தார். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறும் பிடிஆர்.. கொண்டாட்டத்தில் பாஜக - உண்மையா?

கடந்த அம்மா ஆட்சி காலத்தில் மூன்று முறை 142 அடியாக முல்லை பெரியார் அணை நீர்மட்டம் தேக்கபட்டது. அணை என்பது தண்ணீரை தேக்கி வைக்க தான், அதற்காக விதியை நிர்ணயம் செய்வது நேரம், காலம் கொள்வது இயற்கைக்கு முரணானது, பருவமழை ஒத்துழைப்புடன் தான் நீரை தேக்க முடியும், தற்பொது ரூல்கர்வ் என்ற விதி அணை பாதுகாப்புச் சட்டத்தின் படி செயல்படுத்தப்படுகிறதா, அது சட்டமா விதியா, உத்தரவா, ஆணையா என்று தெரியாத நிலையில் விவாதம் பொருளாக உள்ளது.

அதிமுகவை பொறுத்தவரையில் உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற தெளிவான தீர்வு தற்போது கிடைத்துள்ளது. அதிமுகவினர் அனைவரும் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு மனதாக அதிமுக வெற்றிக்கு உழைப்பதற்கு தயாராக உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..இது கடைசி எச்சரிக்கை.. ராணுவம் வந்தாலும் பூட்டு போட்டுவிடுவோம்.! எச்சரித்த அன்புமணி ராமதாஸ் !

விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்து செய்தியில்,  சகோதரத்துவம் மனித நேயம் தலைக்கட்டும்.  வேற்றுமைகள் களைந்து ஒற்றுமை ஓங்கட்டும்.  துரோக சிந்தனைகள் அழிந்து உண்மைகள் உயிர் பெறட்டும் என்று தெரிவித்திருந்தார் சசிகலா. அதுகுறித்து கேள்வி கேட்டனர் செய்தியாளர்கள், அதற்கு நன்றி வணக்கம் என்று சொல்லிவிட்டு, கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் ஆர். பி. உதயகுமார்.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!