விவசாயிகளுக்காக... ஓ.பி.எஸ்.சிடம் நேரம் கேட்டும் கிடைக்கவில்லை - வேதனை..!! வேதனை..!! மு.க.ஸ்டாலின் பேட்டி

First Published Jan 2, 2017, 12:48 PM IST
Highlights


தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால், விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுவிட்டது. இதனால், ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் இறந்தனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் 80க்கு மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.

ஆனால், இதுதொடர்பாக மாநில மற்றும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையொட்டி, வரும் 5ம் தேதி, அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகளின் மறியல் போராட்டத்துக்கு திமுக சார்பில் ஆதரவு தரவேண்டும் என கோரி, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினை அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று, ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினை அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று, ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

அப்போது, 'தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் இம்மாதம் 5ம் தேதி மாநில அளவில் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்துக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர், செய்தியாளார்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதனை தடுக்க எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் வலியுறுத்தி வருகிறேன். இதுதொடர்பாக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் கேட்டும், இதுவரை கிடைக்கவில்லை. இதுவே வேதனையான விஷயமாக உள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தி வருகிறோம். இதற்காக அலங்காநல்லூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றார்.

click me!