ஒரு போலீஸ் அதிகாரி உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர், நான் கூறியதாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்துக்கள் ஓட்டுகள் வேண்டாம் என நான் சொன்னதாக பதிவு செய்துள்ளார். இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுயமரியாதை திருமணம்
திமுக பிரமுகர் கோபால் இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். நான் தொடர்ந்து ஒவ்வொரு திருமண விழாக்களிலும் சொல்லும் செய்தி, சீர்திருத்த திருமணங்கள், சுயமரியாதை திருமணங்கள் நடந்தால் நான் அதனை அன்போடு எடுத்து நடத்துவது உண்டு.
1967 க்கு முன் இது போன்ற திருமணங்கள் சட்டப்படியாக ஏற்றுக்கொள்ளும் படி இல்லாமல் இருந்தது. ஆனால் 1967 பிறகு அண்ணா ஆட்சி காலத்தில் சீர் திருத்த திருமணங்கள் சட்டபடி செல்லும் என நமக்கு எல்லாம் உரிமை பெற்று தந்தார்கள். அதன் படி இன்று சட்டபடி இந்த திருமணம் நடந்துள்ளது.
பாதுகாத்தவர் கோபால்
கலைஞரின் நிழலைக்கூட தொடரக் கூடிய பாதுகாவலராக இருந்தவர் திருமங்கலம் கோபால், கலைஞரின் கன் அசைவில், அவர் எதை சொல்கிறார், என்ன உத்தரவிடுகிறார் என்பதை தெரிந்து கொண்டு அதனை நிறைவேற்ற கூடிய ஆற்றலை பெற்றவர் திருமங்கலம் கோபால். 1970-71 ஆம் ஆண்டில் மதுரையில் இளைஞர் அணி தோற்றுவித்த போது என்னோடு இருந்து துணை நின்றவர் கோபால்.
தலைவரின் மூச்சு பிரியும் வரை தலைவரின் பாதுகாவலராக இருந்தார். இளைஞரணி தோற்றுவித்த காலத்தில், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி என எல்லா பகுதிகளிலும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். அப்போது எல்லாம் எனது பாதுகாப்புக்காக கோபால் துணை வந்திருக்கிறார்.
ஊடகங்களில் தவறான தகவல் பரப்புகிறார்கள்
திராவிட முன்னேற்ற கழகத்தின் எத்தனை அணிகள் இருந்தாலும், எல்லா அணிகளை விடவும் சிறந்த அணி இருக்கிறது என்றால் அது இளைஞர் அணியாக தான் இருக்க முடியும் அது எதார்த்தம் தான், எல்லோரும் தவறாக நினைக்க மாட்டார்கள். தற்போது அந்த இளைஞர் அணியானது தம்பி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தற்போது இயங்கி வருகிறது. எப்படி அன்றைக்கு இளைஞர் அணியை ஊக்க படுத்த வேண்டும், வளர்ச்சி அடைய வேண்டும் என பேராசிரியர் நினைத்தாரோ, இன்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதே போல இன்று நடத்தி கொண்டு வருகிறார். இன்று ஊடகங்களில், சமூக வலைதளங்களில் தவறான விஷயங்களை பரப்பி வருகிறார்கள்.
போலீஸ் அதிகாரி மீது வழக்கு
அண்ணாமலை போன்றோர் கருத்துகளை சொல்லியிருந்தால் கூட வருத்தப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் நமது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பேட்டி தருகிறார். கோவில்களை கொள்ளை அடித்து கொண்டிருக்கிறோம் நாம் என பேசி இருக்கிறார்கள். இதுவரை 5500 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் திமுக மாடல் ஆட்சியில் தான் மீட்கப்பட்டு இருக்கிறது என்றால் அது திமுக ஆட்சி தான. பக்தி என்பது இருந்திருந்தால் திமுக அரசை பாராட்டியிருக்க வேண்டும். அப்படி பேசியிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு பக்தி இல்லை, அது பகல் வேஷம்.
ஒரு போலீஸ் அதிகாரி உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர், நான் கூறியதாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்துக்கள் ஓட்டுகள் வேண்டாம் என நான் சொன்னதாக பதிவு செய்துள்ளார். இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன். திராவிட மாடல் ஆட்சியை திருப்பி அனுப்ப கங்கனம் கட்டி செயல்படுகின்றனர். அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வரக்கூடிய 2024 நாடாளுமன்ற தேர்தல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
பாஜக பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை வேடிக்கை பார்க்க முடியாது... வெட்க கேடு- சீறும் நாராயணன் திருப்பதி