அதிமுகவுடன் அமமுக இணைவதை 90 சதவீத தொண்டர்கள் விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கும் அவரை ஒன்றிணைய வாய்ப்பு இல்லை. இபிஎஸ்வுடன் சேர்ந்து பயணிப்பதில் அமமுகவில் உள்ள யாருக்கும் விருப்பமில்லை.
எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பதில் அமமுகவில் உள்ள யாருக்கும் விருப்பமில்லை. துரோகமும் ஏமாற்று வேலையும் தான் அவரது அரசியல் நடைமுறை என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் ;- எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம், அம்மா அவர்களால் கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட இயக்கம் இன்றைக்கு பலவீனம் அடைந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை மறைப்பதற்காக அமமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து பலரை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அதிமுகவில் இணைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- AMMK Vs AIADMK : அமமுகவின் முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய இபிஎஸ்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்..!
யாரோ ஒருவர் செல்கிறார் என்பதற்காக அவர் சார்ந்த சமூகமே அவருடன் சென்றுவிடும் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஓபிஎஸ் இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் அல்லது ஜனவரியில் அறிவிப்போம். எடப்பாடி பழனிச்சாமி, முதலில் வன்னியர்களை ஏமாற்றினார். அதன் பின்னர் ஒவ்வொருவராக ஏமாற்றி வருகிறார். அதேபோல தான் தற்போது சிறுபான்மையினர் மீது அக்கறை இருப்பது போல் நடித்து அவர்களை ஏமாற்றி வருகிறார்.
இதையும் படிங்க;- திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து! திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம்! இபிஎஸ் விளாசல்
முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இதனை கால தாமதப்படுத்தும் விதமாக ஆளுநர் அதற்கான ஒப்புதலை கிடப்பில் போட்டிருந்தது தவறு. இதுபோல ஆளுநர் தாமதப்படுத்தினால் ஊழல் வழக்குகள் பெருகும் நிலை ஏற்படும். திமுக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என டிடிவி.தினகரன் கூறினார்.
இதையும் படிங்க;- விஷம் குடிச்சு செத்தாலும் சாவமே தவிர! இபிஎஸ் பக்கம் செல்ல மாட்டோம்! OPS-க்காக குரல் கொடுக்கும் மருது அழகுராஜ்
மேலும், அதிமுகவுடன் அமமுக இணைவதை 90 சதவீத தொண்டர்கள் விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கும் அவரை ஒன்றிணைய வாய்ப்பு இல்லை. இபிஎஸ்வுடன் சேர்ந்து பயணிப்பதில் அமமுகவில் உள்ள யாருக்கும் விருப்பமில்லை. துரோகமும் ஏமாற்று வேலையும் தான் பழனிசாமியின் அரசியல் நடைமுறை என டிடிவி.தினகரன் ஆவேசமாக கூறினார்.