திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது - உதயநிதி பெருமிதம்

By Velmurugan s  |  First Published Nov 23, 2023, 5:58 PM IST

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளர் நவாப் மற்றும் வேப்பனஹள்ளி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் முருகன் ஆகியோரின் இல்லத் திருமண விழா கிருஷ்ணகிரி, மற்றும் குந்தாரப்பள்ளியில் நடைப்பெற்றது. தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைப்பெற்ற இந்த திருமண விழாவிற்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து மணமக்களை வாழ்த்திப் பேசிய உதயநிதி ஸ்டாலின் இந்த திருமண விழாவில் கலத்துக்கொண்டு கலப்புத் திருமணத்தினை நடத்தி வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். மணமக்கள் புகுந்த வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திடும் வகையில் வாழ்ந்திட வேண்டும். குறிப்பாக பிறக்கப்போகின்ற குழந்தைககளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tap to resize

Latest Videos

கணவருடன் மாலை மாற்றி திருக்கடையூரில் வானதி சீனிவாசன் சிறப்பு வழிபாடு; அண்ணாமலை பெயரில் சிறப்பு அர்ச்சனை

மேலும் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார். இதில் குறிப்பாக கலைஞர் உரிமைத் திட்டத்தின் மூலமாக தகுதியான அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதோடு பல்வேறு சிறப்புமிக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருதால் தமிழகத்தில்  திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் வளர்ச்சிப் பணியில் பயணித்து வருவதாக குறிப்பிட்டார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் இந்த திருமண விழாவிற்கு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

click me!