மு.க.அழகிரியோடு ஸ்டாலின் சந்திப்பு.! நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் தயாநிதி அழகிரி போட்டியா.?

By Ajmal Khan  |  First Published Jul 10, 2023, 9:43 AM IST

முதலமைச்சர் ஸ்டாலினும், மு.க.அழகிரியும் பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப நிகழ்வில் ஒன்றாக கலந்து கொண்டது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தயாநிதி அழகிரியை களத்தில் இறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தயாளு அம்மாளின் 90வது பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளின் 90வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில்விற்காக கோபாலபுரம் இல்லம் வண்ண மலர்களால் அலங்கரித்து விழாக்கோலமாக காணப்பட்டது. இந்த பிறந்தநாள் நிகழ்வில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக ஆஜராகியிருந்தனர். தமிழக அமைச்சர் உதயநிதி, நடிகர் அருள்நிதி, தயாநிதி அழகிரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அரசியல் தொடர்பாகவும், திரைத்துறை தொடர்பாக பேசினர். 

Tap to resize

Latest Videos

ஸ்டாலின்- அழகிரி சந்திப்பு

இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினோடு கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். இதனையடுத்து சில மணி நேரத்தில் மு.க.அழகிரி தனது மனைவி காந்திமதி உடன் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.  சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலினும், மு.க.அழகிரியும் சந்தித்து பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு கருணாநிதி மறைவின் போது இருவரும் ஒன்றாக சந்தித்த நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், முதலமைச்சர் ஸ்டாலினும், மு.க.அழகிரியும் சந்தித்து பேசிக்கொண்டதாக தெரிவித்தார். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதா? என்ற கேள்விக்கு எப்போது இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர் என எதிர் கேள்வி எழுப்பினார். அவ்வப்போது இரண்டு சந்தித்து பேசிக்கொண்டதாகவும் உதயநிதி கூறினார்.

மதுரை தொகுதியில் தயாநிதி அழகிரி போட்டியா.?

திமுக தலைவராக கருணாநிதி இருந்த போது திமுக தென் மண்டல் தலைவராகவும்,  மத்திய அமைச்சராகவும் இருந்த மு.க.அழகிரி வாரிசு போட்டி காரணமாக ஏற்பட்ட மோதலால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து திமுகவிற்கு எதிராகவும், மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் பேட்டியளித்தும், பொதுக்கூட்டம் நடத்தியும்  பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதனிடையே கடந்த இரண்டு வருடங்களாக அமைத்தி காத்து வரும் அழகிரி திமுகவிற்கு எதிராக எந்த கருத்தையும் கூறவில்லை. எனவே இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தயாநிதி அழகிரிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவல் தற்போது திமுகவினர் மத்தியில் பரவி வருகிறது. 

இதையும் படியுங்கள்

குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி ஸ்டாலின் வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டார்..! கிண்டல் செய்யும் பாஜக

click me!