எடப்பாடி முதல்வராவதை எந்த கொம்பனாளும் தடுக்க முடியாது - முன்னாள் அமைச்சர்கள் பேச்சு

By Velmurugan s  |  First Published Jul 10, 2023, 9:35 AM IST

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி மதுரை அருகே அதிமுக எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.


மதுரை விமான நிலையம் அருகே உள்ள டி. வலையங்குளத்தில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக சார்பில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநாட்டு பணிகள் தொடங்குவதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று மாநாட்டு மைதானத்தில் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சிகள் அதிமுக சார்பில் மூத்த நிர்வாகிகள்  தம்பிதுரை, கே.பி முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விசுவநாதன், காமராஜ், சிவி சண்முகம், வளர்மதி, சரோஜா, திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், கே டி ராஜேந்திர பாலாஜி மற்றும் எம்எல்ஏக்கள் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். 

இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்கள், மதுரையில் நடைபெறும் மாநாடு அரசியல் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமையும். எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்கள் நடத்திய மாநாடு போல எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும். மாநாட்டுக்கு பின் தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் மற்ற கட்சிகள் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க கூடிய வகையில் ஒரு அரசியல் மாற்றத்தை இந்த மாநாடு ஏற்படுத்தும். 

Tap to resize

Latest Videos

undefined

மீண்டும் சீனாக சீனுக்கு வரும் சசிகலா.! அதிரடி அறிவிப்பு வெளியீடு.! அதிர்ச்சியில் இபிஎஸ் .!

வரும் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. தமிழகத்தில் பொம்மை ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு எடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக திரும்பி உள்ளார்கள். அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதுரையில் நடைபெறும் மாநாட்டில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்களை பங்கேற்கச் செய்ய வேண்டுமென முன்னாள் அமைச்சர்கள் பேசினர்.

குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி ஸ்டாலின் வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டார்..! கிண்டல் செய்யும் பாஜக

click me!