யாத்திரை தொடங்கிய நேரத்தில் சோனியாகாந்தியிடம் இருந்து வந்த ‘மெசேஜ்’ - இதென்னப்பா கடைசியில் ட்விஸ்ட்

By Raghupati R  |  First Published Sep 7, 2022, 8:00 PM IST

12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.


இந்தியா முழுவதும் பாரத யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த நடை பயணத்தை இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் தொடங்கி வடமுனையான காஷ்மீரில் முடிக்க முடிவு செய்துள்ளார்.  அதன்படி இந்த பயணம் தமிழகத்தில் தொடங்கி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீர் சென்றடைகிறது. 

12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.  இதற்கான திட்டமிடல் கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தது. டெல்லியில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட மாநில காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி என பலரும் கன்னியாகுமரியில் முகாமிட்டு பாத யாத்திரை பயணத்தை ஒருங்கிணைத்து வந்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..அதிமுக அலுவலகத்தில் எடுக்கப்பட்ட அந்த பொருள் ? சிபிசிஐடி வெளியிட்ட முக்கிய தகவல் !!

undefined

கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது.  நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்னர், பூம்புகார் படகுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான படகில் சென்ற ராகுல், விவேகானந்தர் நினைவு மண்டபம், ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். குமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு சோனியா காந்தி செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி , தமிழில் மொழிபெயர்த்து மேடையில் வாசித்தார். அதில், ‘அனைவருக்கும் வணக்கம்.  நான் தற்போது மேற்கொண்டு வரும் மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை கருத்தில் கொண்டு,  இன்று மாலை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தொடங்க இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ( பாரத் சோடோ யாத்ரா)  இந்திய ஒற்றுமை பயண தொடக்க விழாவில் உங்கள் அனைவருடனும்,  நேரில் கலந்து கொள்ள இயலாமல் போனதற்கு வருந்துகிறேன்.   

மேலும் செய்திகளுக்கு..ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்

இந்த யாத்திரை மிகவும் புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் எனும் மகத்தான மாபெரும் மக்கள் இயக்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.  நமது இயக்கம் இந்நிகழ்விற்கு பிறகு மிகுந்த புத்துணர்ச்சி பெறும் என்று நான் நம்புகிறேன்.  இந்திய அரசியலில் இது ஒரு மகத்தான மாற்றத்தை நிகழ்த்தவல்ல ஒரு முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க தருணம்.  சுமார் 3600 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிகழ உள்ள இந்த பாதை யாத்திரையில் முழுமையாக கலந்து கொண்டு நிறைவு செய்ய போகும் நம் கட்சியின் 120 சகோதர,  சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  

இவை தவிர பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரையில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.  அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  நிகழ்வுகளை தவறாமல் நேரலையில் பார்த்த வண்ணம்  இந்திய ஒற்றுமை பயணத்தில்  உற்சாகத்துடனும், உணர்வு பூர்வமாகவும் பங்கேற்பேன்.  ஆகவே நாம் அனைவரும் நமது தீர்மானத்தில் ஒற்றுமையாகவும் , உறுதியாகவும்,  ஒருங்கிணைப்புடனும் முன்னேறி செல்வோம்..  ஜெய்ஹிந்த்’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..உனக்கு 23 எனக்கு 35.. அண்ணியுடன் கள்ளக்காதல் - மதுரை ஜோடிக்கு ஏற்பட்ட விபரீதம்

click me!