தேசிய கொடி என்ன உங்க சொத்தா? மக்கள் மாறிட்டாங்க.. ஆர்.எஸ்.எஸ் & பாஜகவை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி

By Raghupati RFirst Published Sep 7, 2022, 7:02 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘ஒற்றுமைக்கான பயணம் ’ என்ற பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.

நாடு முழுவதும் 12 மாநிலங்கள் வழியாக  150 நாட்கள் 3, 570 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார்.  இந்த யாத்திரையானது  திருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூரு, பெல்லாரி, ராய்ச்சூர், விக்ரபாத், ஜல்கயோன், இந்தூர், ஆழ்வார், டெல்லி, அம்பாலா, பதான்கோட், ஜம்மு சென்று ஸ்ரீ நகரில் முடிவடைகிறது. இதில் ராகுல் காந்தியுடன்  காங்கிரஸ் தலைவர்கள் 120 நடைபயணம் மேற்கொள்கின்றனர்.  

மேலும் செய்திகளுக்கு..ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்

ராகுல் காந்தியின்  ஒற்றுமைக்கான யாத்திரை 4. 30 மணிக்கு தொடங்கியது.  இந்த தொடக்க விழாவில்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,  சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ்  மற்றும்  கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட  ஏராளமான  காங்கிரஸ் தலைவர்கள்  பங்கேற்றுள்ளனர். காந்தி நினைவு மண்டபம் முன்பாக ராகுல் காந்தியிடம் தேசியக்கொடியை வழங்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

அதன்பிறகு  தேசியக்கொடியுடன்  நடைபாதையாக வந்த, அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், ‘அழகான தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 3 சமுத்திரமும் சங்கமிக்கும் இந்த இடத்தில் தேச ஒற்றுமைக்கான பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னரும் இந்தப் பயணம் ஏன் என்ற கேள்வி எழுகிறது. 

மேலும் செய்திகளுக்கு..அதிமுக அலுவலகத்தில் எடுக்கப்பட்ட அந்த பொருள் ? சிபிசிஐடி வெளியிட்ட முக்கிய தகவல் !!

நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தேசியக் கொடியை பார்க்கும் போது அதன் மாட்சிமை, மகத்துத்துவக்காக அதை வணங்கி வாழ்த்த வேண்டும். மூவர்ணக் கொடி யாரோ சிலருக்கு மட்டும் சொந்தமானதல்ல. நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. நமது தேசியக்கொடி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களின் உணர்வுகளையும் பிரபலிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ், பாஜக, தேசியக் கொடியை தங்கள் தனிப்பட்ட கொடியாக கருதுகிறார்கள். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து எங்களை மிரட்டலாம் என நினைக்கிறார்கள்; ஒரு நாளும் பயப்பட மாட்டோம். இந்தியாவின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது.  நாட்டு மக்களை பாஜக சரியாக புரிந்துகொள்ளவில்லை' என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..உனக்கு 23 எனக்கு 35.. அண்ணியுடன் கள்ளக்காதல் - மதுரை ஜோடிக்கு ஏற்பட்ட விபரீதம்

click me!