அதிமுகவின் 50 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு தாவ திட்டம்.. எடப்பாடி பழனிச்சாமியின் தூக்கத்தை கலைத்த ஆர்.எஸ் பாரதி.

Published : Sep 07, 2022, 06:48 PM ISTUpdated : Sep 07, 2022, 06:52 PM IST
அதிமுகவின் 50 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு தாவ திட்டம்.. எடப்பாடி பழனிச்சாமியின் தூக்கத்தை கலைத்த ஆர்.எஸ் பாரதி.

சுருக்கம்

அதிமுகவின் 50 எம்எல்ஏக்கள் 2 எம்பிகள் 30 மாவட்ட செயலாளர்கள் திமுகவிடம் தொடர்பில் உள்ளனர் என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.  

அதிமுகவின் 50 எம்எல்ஏக்கள் 2 எம்பிகள் 30 மாவட்ட செயலாளர்கள் திமுகவிடம் தொடர்பில் உள்ளனர் என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தங்களின் தொடர்பில் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில் ஆர்.எஸ் பாரதி இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். 

அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே உச்சகட்ட மோதல் நடந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி குதூகலத்தில் உள்ளார். இந்நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இது ஒருபுறம் உள்ள நிலையில் மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமி திமுகவையும் குறிவைத்து விமர்சித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: சென்னை பெசன்ட் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்... காரணம் இதுதான்!!

இந்நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி, எம்எல்ஏ உதயநிதி எந்த ஒரு பதவியில் இல்லாவிட்டாலும் அவர்தான் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார், ஆனால் அதிமுக அப்படி அல்ல, இது தொண்டர்களால ஆளப்படுகிற கட்சி, தொண்டர்களால் நடத்தப்படுகின்ற கட்சி அதிமுக, இங்கு தலைவர்களுக்கு இடமில்லை. இங்கு தொண்டர்களுக்கு தான் இடம்.

இதையும் படியுங்கள்: பஸ்சுல பக்கத்துல பக்கத்துல பேசிகிட்டே போகலாம்.. கருமம் புடிச்சவனுங்களே.. இங்கயுமா பேசிகிட்டே போறது..??

நானும் தொண்டன் என்ற முறையில் தான் இங்கு வந்திருக்கிறேன். திமுகவின் மீது அதிருப்தியில் உள்ள அக்காட்சியின் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் கூறினார். எடப்பாடியாரின் இந்தக்  பேச்சு திமுகவினரைஅதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது அரசியல் களத்தில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் அதிமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறிய அவர், அதிமுகவின் 50 எம்எல்ஏக்கள் 2 எம்பிகள், 30 மாவட்ட செயலாளர்கள், திமுகவின் தொடர்பிலிருந்து வருகின்றனர். அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் திமுக எம்எல்ஏக்களின் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டால், நாங்களும் எங்களுடன் பேசிவரும் அதிமுகவினரின்  பட்டியலை வெளியிடுவோம் ,உண்மையான திராவிட இயக்கம் திமுகதான், அதிமுகவில் இருந்துதான் பலர் திமுகவுக்கு வந்திருக்கிறார்கள், இதை எவரும் மறுக்க முடியாது. ராகுல்காந்தியின் நடைபயணம் பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. இவ்வாறு ஆர். எஸ் பாரதி கூறினார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?