தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்..! ஆ.ராசாவிற்கு டஃப் கொடுக்கும் நயினார் நாகேந்திரன்

By Ajmal Khan  |  First Published Jul 6, 2022, 8:44 AM IST

தனி தமிழ்நாடு என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வலியுறுத்திய நிலையில், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


தனி தமிழ்நாடு

அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு என்ற முழக்கம் 1938-லிருந்து ஒலிக்கத் தொடங்கியது. பெரியார், அண்ணாவில் தொடங்கி தற்போது ஆ.ராசாவரை  தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் ”உள்ளாட்சியில் நல்லாட்சி” எனும் தலைப்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே வாருங்கள். சுதந்திரத் தமிழ்நாடுதான் ஒரே தீர்வு என்று பெரியார் சொன்னார். பெரியாரை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் அதிலிருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும், எங்களை தந்தையையும் ஒதுக்கிவிட்டு இந்தியா வாழ்க என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் ஆளுங்கட்சியில் இருக்கிறோம் என்னும் திமிறில் பேசவில்லை.

Tap to resize

Latest Videos

அதிமுக பொதுச்செயலாளர் மூடில் இபிஎஸ்.. கொடநாடு கொலை, கொள்ளை அஸ்திரத்தை ஏவும் ஓபிஎஸ் தரப்பு.. அடுத்து என்ன?

நெல்லை மாவட்டம் இரண்டாக பிரிப்பு

தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு , திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடியதாக ராசா பேசினார். அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று கூறியுள்ளார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நெல்லையில் பாஜக சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பாஜக சட்ட மன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என பேசி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒருங்கிணைந்த  நெல்லை மாவட்டமானது நிர்வாக வசதிக்காக  தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது போல் மாநில அரசின்  நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை ஆந்திரா போன்று இரண்டாகப் பிரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மீண்டும் வெடிக்கும் ”தனி தமிழ்நாடு” கோரிக்கை.. பெரியார் முதல் அண்ணா வரை .. வரலாறு சொல்வது என்ன..?

தமிழகத்தில் இரண்டாக பிரிக்க வேண்டும்

ஆ.ராசாவுக்கு இருக்கும் ஆசை நயினார் நாகேந்திரனுக்கு மட்டும் இல்லாமலா போய்விடுமா என பேசியவர், நானும் கேட்பேன், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டுமென்று. 234 தொகுதிகள் இருக்கு. அதில்  117- 117 ஆக பிரிப்போம். அப்போது நாங்களும் முதல்வர்களாக இரண்டு இடங்களிலும் வந்துவிடுவோம் என கூறினார். தமிழகத்தின் தென் பகுதியிலும் முதல்வராக வருவோம். வட பகுதியிலும் முதல்வராக வருவோம் என கூறினார்.  அவ்வாறு செய்ய முடியாது என்று நினைத்துவிடாதீர்கள், செய்யக்கூடிய இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் முடியும் என்று அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையும் படியுங்கள்

மாநில சுயாட்சி இல்லையென்றால் !! தனி தமிழ்நாடு கேட்போம்.. ஸ்டாலின் முன்னிலையில் மிரட்டல் விடும் ஆ.ராசா..?
 

click me!