ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரி ஒபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனு, இன்று காலை விசாரணைக்கு வருகிறது. அதே போல் அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற விதிக்க உத்தரவுக்கு தடைக்கோரி ஈபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்தனர். இந்நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில், கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க:தனித் தமிழ்நாடு கேட்பீங்க.. ஐந்தே நிமிடத்தில் திமுக ஆட்சி இருக்காது.. பாஜக பொதுச்செயலாளர் கடும் எச்சரிக்கை!
இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து கடந்த ஜுன் 14ல் சென்னை தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை கோரிக்கை எழுந்துள்ளது. அதன் பிறகு இந்த பிரச்சனை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பும் வழக்கு போடும் வரை சென்றது.அதிமுக பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், நள்ளிரவில் உத்தரவு பிறப்பித்தது. அதன் புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்பட கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் அதிமுக பொதுகுழுவிற்கு உறுப்பினர் அடையாள அட்டை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன்படி, நீதிமன்ற கட்டுப்பாடுகளுடன் கடந்த ஜூன் 23 ஆம் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் மூலம் அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். மேலும்
அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பில் கூட்டத்தின் பாதியிலே புறப்பட்டார். அப்போது அவருக்கு எதிராக பலரும் கோஷம் எழுப்பினர்.
மேலும் படிக்க:சட்டவிதிகளை மாற்ற யார் உங்களுங்கு அதிகாரம் தந்தது? ஓபிஎஸ்-ஈபிஎஸை விளாசும் சசிகலா!!
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டை மீறியதாக ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் ஏற்கனவே விதித்த கட்டுப்பாடுகள் செல்லாது எனவும், பொதுக்குழுவுக்கு தடைக் கோரும் வழக்கை தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க ஓபிஎஸ் தரப்பினர் நேற்று மனு அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று (ஜூலை 6) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். இதற்கிடையே அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மேலும் படிக்க:அதிமுகவை இப்படி பண்ணீட்டீங்களே? அடுத்த பிளான் இதுதான் - சசிகலா சொன்ன சீக்ரெட் !