கூலிக்கு மாரக்கிற வேலையை அவர் செய்யலாம் ஆனால், நான் செய்ய மாட்டேன் என்று ஜெயக்குமரின் கருத்துக்கு மருது அழகுராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
கூலிக்கு மாரக்கிற வேலையை அவர் செய்யலாம் ஆனால், நான் செய்ய மாட்டேன் என்று ஜெயக்குமரின் கருத்துக்கு மருது அழகுராஜ் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதிமுகவை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்னை வெடித்தது. இதனிடையே அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் மருது அழகுராஜ் இருந்து விலகினார். நமது அம்மா நாளிதழிலிருந்து நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி இருந்தார்கள். இதை அடுத்து மருது அழகுராஜ் நமது அம்மாவில் இருந்து வெளியேறினார். அன்றிருந்து அவர் எடப்பாடிக்கு எதிரான கருத்துக்களை சொல்லி வந்தார்.
இதையும் படிங்க: "தமிழக அரசு இதை செய்தே ஆக வேண்டும்!" களத்தில் குதித்த கமல்ஹாசன்
கோடநாடு விவகாரத்தில் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மருது அழகுராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் கருத்துகள் மூலம் அவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பது தெரிய வந்தது. இதற்கு முன்னால் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் உடன் மருது அழகுராஜ் கைகோர்த்துக்கொண்டு வாங்கிய கூலிக்கு மாரடிக்கிறார் என்று கடுமையாக சாடினார். மேலும், நமது அம்மா பத்திரிகையில் மருது அழகுராஜ் முறைகேடு செய்து விட்டார். நமது எம்ஜிஆர் பத்திரிகையில் பொறுப்பாசிரியராக இருந்தபோது அங்கேயும் மருது அழகுராஜ் கையாடல் செய்துள்ளார். நமது அம்மா பத்திரிகை விளம்பர வருமானங்களை கணக்கில் வராமல் எடுத்துக் கொண்டிருக்கிறார். பாமக நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்தார். அதற்கான விளம்பரம் நமது அம்மா நாளிதழில் வந்தது. 60 ஆயிரம் ரூபாய் கணக்கில் வரவில்லை.
இதையும் படிங்க: "திமுககாரன் என்றாலே சூடு சுரணை இருக்காது"... கமலாலயத்தின் கதவை தட்டுவார்கள்.. வினோஜ் பி செல்வம் பேச்சு.
இதன் காரணமாகத்தான் நமது அம்மாவிலிருந்து மருது அழகுராஜ் விலக்கி வைக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஏன் மருது அழகுராஜ் கேட்கவில்லை? ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா பற்றி எதுவும் சொல்லாதது ஏன்? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ரவீந்திரநாத் எம்பி சந்தித்து புகழ்ந்து பேசியது ஏன்? என்று மருது அழகுராஜுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை ஜெயக்குமார் முன் வைத்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மருது அழகுராஜ், ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது புனித ஜார்ஜ் கோட்டையில் புதிய வரலாறு படைப்போம் என்று இபிஎஸ் ஒரு மடல் எழுதினார். அதை எழுதியது இந்த மருதுதான். தயவு கூர்ந்து சொல்கிறேன். கூலிக்கு மாரக்கிற வேலையை ஒருவேளை ஜெயக்குமார் செய்யலாம். ஆனால், நான் செய்ய மாட்டேன் என்று தெரிவித்தார்.