அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? என பாஜக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுக- பாஜக மோதல்
அதிமுக- பாஜக இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மற்றும் செயலாளர் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அப்போது பாஜக நிர்வாக சிடிஆர் நிர்மல்குமார், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருந்தார். 420 மலையென்றும், அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக விமர்சித்தார்.
2 நாளில் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படுவார்.? நாஞ்சில் சம்பத் பரபரப்பு தகவல்
அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி
இதற்கு பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கடும் கண்டனத்தை தெரிவித்து டுவிட்டர் வெளியிட்டிருந்தார். அதில், அதிமுக கூட்டணியில் இருக்கும்போது இப்படி செய்திருக்க கூடாது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜகதான். அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார். இதனையடுத்து அதிமுக-பாஜக நிர்வாகிகளுக்குள் மோதல் போக்கு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்தனர். இந்தநிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,
அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை
அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? என கேள்வி எழுப்பினார். பாஜகவினரிடம் சகிப்புத்தன்மை இல்லையென்றும் விமர்சித்தார். ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைவது என்பது இயல்பானது. பாஜகவினருக்கு இதனை ஏற்க ஜீரன சக்தி இல்லையெனவும் கூறினார். ஊர்க்குருவி உயரப்பறந்தாலும் பருந்தாகாது. அதுபோல, எவனாலும் ஜெயலலிதாபோல ஆக முடியாது. எனவே அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை என தெரிவித்தார். மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது என செல்லூர் ராஜூ அட்வைஸ் செய்தார்.
இதையும் படியுங்கள்
பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது..? அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முக்கிய முடிவு