பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது..? அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முக்கிய முடிவு

By Ajmal KhanFirst Published Mar 9, 2023, 12:57 PM IST
Highlights

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குறித்து ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் யார்.?

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிரிவாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக யாருக்கு சொந்தம் என ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்றங்களில் சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் நீக்கப்பட்டார். மேலும் அதிமுக சட்ட விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

2 நாளில் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படுவார்.? நாஞ்சில் சம்பத் பரபரப்பு தகவல்

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு.?

இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குறிப்பாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என அறிவித்தது. இதனையடுத்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிமுக தலைமை தொடங்கியது. இதற்காக மாவட்ட செயலாளர்களிடம் ஒப்புதல் பெறுவதற்காக இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஒப்புதலோடு தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாகவும், மூன்று மாத காலத்திற்குள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிப்பது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்து 10 மாவட்டச் செயலாளர்கள் வழி மொழிந்தால் மட்டுமே பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் சூழல் உள்ளது. எனவே எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் செந்தில் முருகனை கட்சியை விட்டு தூக்கிய ஓபிஎஸ்- காரணம் என்ன.?

click me!