சமூக நீதி ஆட்சி என சுயதம்பட்டம் அடிக்கும் திமுக.! ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா ? - சீமான்

By Ajmal Khan  |  First Published Jan 6, 2023, 10:20 AM IST

துப்பரவு தொழிலாளியை  சாக்கடையை அள்ளச் செய்ததற்கு எம்எல்ஏ எபிசேனர் தான்  முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரை அச்சட்டமன்ற உறுப்பினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென சீமான் குற்றம்சாட்டியுள்ளார். 
 


திமுகவின் செயல் ஏமாற்றம்

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் மனித மலத்தை சாதிவெறியர்கள் கலந்த கொடுஞ்செயல் புகுடிநீர்த்தொட்டியில் தொடர்பான செய்தி வெளியாகி, ஒரு வாரத்தைக் கடந்தும் இன்றுவரை அதில் தொடர்புடைய குற்றவாளிகள் எவரையும் கைது செய்யாதிருக்கும் திமுக அரசின் செயல் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. சமூக நீதி ஆட்சியென நாள்தோறும் சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசு, தமிழ்நாட்டையே உலுக்கிய இக்கோரச்சம்பவத்தில் தொடர்புடைய சாதி வெறியர்களைக் கைது செய்யாது மெத்தனப் போக்கோடு நடந்துகொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

Tap to resize

Latest Videos

அண்ணாமலையில் நாகரீகமற்ற செயல்..! அவராக‌ திருந்தவில்லை..!அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா?-சிபிஎம்

இதுதான் திமுகவின் சாதி ஒழிப்புச் செயல்பாடா?

எல்லோருக்குமான ஆட்சியெனத் தற்பெருமை பேசும் திமுக அரசு, இக்கொடிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியையோ, நியாயத்தையோ பெற்றுத்தராது, குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றத் துணைபோவது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களுக்குச் செய்யப்படும் சனநாயகத்துரோகமாகும். நாடறியப்பட்ட ஒரு கொடுங்கோல் சம்பவத்தை அரங்கேற்றிய குற்றவாளிகள் மீதே கைது நடவடிக்கையை மேற்கொள்ள திமுக அரசு தயங்குகிறதென்றால், எவ்வளவு பெரிய மோசடித்தனம் இது? இதுதான் பெரியார் வழியிலான விடியல் ஆட்சியா? இதுதான் சமத்துவத்தை நிலைநாட்டும் இலட்சணமா? இதுதான் திமுகவின் சாதி ஒழிப்புச் செயல்பாடா? அக்கொடும் நிகழ்வு நடைபெற்று ஒரு வாரமாகியும்கூட ஒரு அமைச்சர்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவும், துணைநிற்கவும் அக்கிராமத்திற்குச் செல்லாததேன்? இதுதான் சமூக நீதியைப் பேணிக்காக்கும் அரும்பணியா? 

பழசை மறந்துடாதீங்க.. நன்றி கெட்ட கேகேஎஸ்எஸ்ஆர்.. நாவடக்கம் தேவை.. எச்சரிக்கும் ஜெயக்குமார்..!

எம்எல்ஏ மீது நடவடிக்கை.?

மனிதக்கழிவை மனிதனே அள்ளும் நிலை ஒழிக்கப்பட வேண்டுமெனக் குரலெழுப்பி வரும் நிலையில், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆய்வு செய்யும்போது, அவரது கண்முன்னே துப்புரவுத் தொழிலாளர் பாதுகாப்பு உபகரணங்களோ, கையுறையோ இன்றி, சாக்கடையை அள்ளச் செய்யப்பட்டது சட்டத்திற்குப் புறம்பானது; மக்கள் பிரதி நிதியான சட்டமன்ற உறுப்பினர் முன்பே நடந்த இச்செயலுக்கு, அவர்தான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரை அச்சட்டமன்ற உறுப்பினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உயர்வு

ஆகவே, அடையாள அரசியல் செய்வதையும், காட்சி அரசியல் செய்வதையும் கைவிட்டு, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்வைத்து இனியாவது செயலாற்ற முன்வர வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்வதாக சீமான் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்..! 4 பேர் திடீர் மாயம்..! தேடும் பணியில் கடலோர காவல் படை

click me!