புத்தகப் பிரியர்களே தயாரா.? சென்னையில் இன்று தொடங்குகிறது புத்தக கண்காட்சி..! எத்தனை நாட்கள் நடைபெறுகிறது.?

By Ajmal Khan  |  First Published Jan 6, 2023, 8:47 AM IST

சென்னை புத்தக கண்காட்சி சென்னையில் இன்று தொடங்கி வருகிற 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தக பிரியர்கள் தங்களுக்கு தேவையானை புத்தகங்களை வாங்கும் வகையில் 1000அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 


சென்னையில் தொடங்குகிறது புத்தக கண்காட்சி

எலக்ட்ரானிக் யுகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் சென்னை மக்களுக்காக ஆண்டு தோறும் நடைபெறும் புத்தக திருவிழா, ஓர் இளைப்பாறும் பூஞ்சோலை என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளது.  46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கிறது. புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5.30 மணிக்கு தொடங்கிவைக்கிறார். இந்த விழாவில் கலைஞர் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருதும் வழங்கப்படவுள்ளது. 

Tap to resize

Latest Videos

ராட்சசியை அறிமுகம் செய்து நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் பங்கு உண்டு! ஜெ.குறித்து அமைச்சர் KKSSR கடும் தாக்கு

1000 அரங்குகளுடன் புத்தக கண்காட்சி

ஒய்எம்சிஏ மைதானத்தில் சுமார் 1,000 அரங்குகளுடன் இந்த புத்தகக் காட்சி நடைபெறுகிறது. இன்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை சுமார் 17 நாட்கள் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. குழந்தைகள் புத்தகங்களுக்கு என தனியாக அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்களுக்கான புத்தகங்கள், நாவல்கள், என லட்சக்கணக்கான புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறவுள்ளது. கடந்த ஆண்டை பொறுத்தவரை குழந்தைகளுக்கான புத்தகங்களும், பெண்களுக்கான புத்தகங்களும் அதிகளவில் விற்பனை நடைபெற்றது. எனவே இந்த ஆண்டு எந்தவகையான புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகும் என புத்தக விற்பனையாளர்கள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர். 


சர்வதேச புத்தக கண்காட்சி

இதற்கிடையில் இந்த புத்தக கண்காட்சியில் வருகிற 16,17,18 ஆகிய நாட்களில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. அமெரிக்கா,லண்டன், இத்தாலி,பிலிப்பைன்ஸ்,டாண்சானியா, அர்ஜெண்டினா உள்ளிட்ட 25 நாடுகளிலிருந்து பதிப்பாளார்கள் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 17 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழா புத்தக பிரியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

அண்ணாமலையில் நாகரீகமற்ற செயல்..! அவராக‌ திருந்தவில்லை..!அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா?-சிபிஎம்

click me!