
உடல்நலக்குறைவு காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(90). இவர், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார். இவருக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், தயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்த ஓபிஎஸ் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக தேனிக்கு விரைந்து தயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.