திமுக எம்.பி. கனிமொழி பிறந்தநாளையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
திமுக எம்.பி. கனிமொழி பிறந்தநாளையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திமுகவில் அன்மையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதேபோல் திமுக எம்.பி. கனிமொழிக்கும் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திமுக எம்பி கனிமொழி பிறந்தநாளையொட்டி நாமக்கல்லில் திமுக எம்பி கனிமொழியை வாழ்த்தி போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு... விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!
நாமக்கல் கிழக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கே.மோகன் சார்பில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில், பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் கனிமொழியை நாற்காலியில் அமர வைத்து பார்க்கின்றனர். கனிமொழி கையெழுத்து போட கலைஞர் பேனா எடுத்துக் கொடுக்கிறார். இதன் பின்னணியில் தலைமைச் செயலகம் உள்ளது. இதனால் கனிமொழியை முதலமைச்சரை போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கனிமொழி அமர்ந்திருக்கும் மேஜை மீது வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையில் அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: அண்ணாமலையை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வீடியோ… நடவடிக்கை எடுக்க பாஜகவினர் வலியுறுத்தல்!!
இதன்மூலம் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது போல் கனிமொழிக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதே அவரது தொண்டர்களின் ஆசையாக உள்ளது என்பதை இந்த போஸ்டர் வெளிப்படுத்துகிறது. மேலும் அந்த போஸ்டரில், புறம் காத்தது போதும் அகம் காக்க வா என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனால் கட்சிக்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளதோடு இந்த போஸ்டர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.