தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ரபேல் வாட்சில் தொடங்கி, காயத்திரி ரகுராம் விவகாரம், பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குவாதம், தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய விவகாரம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதையும் படிங்க: தைரியம் இருந்தால் திமுக தனித்து நிற்கட்டும்… சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி!!
இதுஒருபுறம் என்றால் மறுபுறம் திமுகவினர் அண்ணாமலை கடுமையாக சாடி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அண்ணாமலைக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே அண்ணாமலைக்கு ஆதரவு எதிர்ப்பும் இருக்கும் நிலையில் அண்ணாமலை குறித்தும் அவரது தாயார் குறித்தும் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் கோவையை சேர்ந்த ரமேஷ் என்பவர் பேசியதோடு அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு... விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!
இதை அடுத்து அந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவின் கோவை நகர் மாவட்ட தலைவர் பாலாஜி, உத்தமராமசாமி மற்றும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்ட பாஜகவினர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.