அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிருஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித்குமார் அவரது வாதங்களை முன்வைத்தார். அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஈபிஎஸ் தரப்பு செயல்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு நீதிபதியிடம் கூறினார். ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படாது என அதிமுக விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அண்ணாமலையினால் தான் பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை..!- கே.எஸ்.அழகிரி ஆவேசம்
ஜெயலலிதா மரணத்திற்கு பின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியே நிர்வாக பதவி என்றும் அதிமுகவில் ஒருங்கிணைபாளர்கள் பதவி காலம் 5ஆண்டுகள் இதில் நிர்வாகிகள் நியமனம் உட்பட அனைத்திலும் இருவரும் இணைந்தே முடிவு எடுக்க வேண்டும். தேர்தல் தொடர்பான முடிவு நிர்வாகிகள் நியமனத்தை இரட்டைத் தலைமையின் முடிவே செல்லும் என்றும் கட்சி முடிவுகளை இரட்டை தலைமையும் இணைந்தே எடுக்க முடியும் என்றும் இரட்டை தலைமை ஒரே ஆன்மாவாக செயல்பட வேண்டும் என்பது போல அதிமுக விதியில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு முன் தமிழ்மகன் உசேன் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது விதிமீறல். பொதுக்குழுவை ஒருங்கிணைபாளர் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே கூட்ட முடியும். அவை தலைவரல்ல. ஜுலை மாதம் நடந்த பொதுக்குழு சட்டவிரோதம்.
இதையும் படிங்க: தைரியம் இருந்தால் திமுக தனித்து நிற்கட்டும்… சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி!!
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை குறுக்கு வழியில் ஈபிஎஸ் தரப்பினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த வழக்கு விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி.தினகரன் வழக்கை சுட்டிக்காட்டி வாதம் நடைபெற்றது. மேலும் தலைமை அலுவலகம் பொறுப்பில் 10 ஆண்டுகள் இருந்தவர்கள்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் எடப்பாடி பழனிசாமி ஒருவர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வகையில் அதிமுக விதிகளில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டது. சுமார் இரண்டு மணி நேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு விசாரணையில் நாளை அனைத்து தரப்பினரும் வாதங்களை நாளை நிறைவு செய்ய அறிவுறுத்தியதோடு வழக்கின் விசாரணையும் நாளைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.