ராட்சசியை அறிமுகம் செய்து நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் பங்கு உண்டு! ஜெ.குறித்து அமைச்சர் KKSSR கடும் தாக்கு

By vinoth kumarFirst Published Jan 6, 2023, 6:43 AM IST
Highlights

தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருந்து வருகிறார். இவர் சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கடுமையான விமர்சனம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பெருந்தலைவர்கள் உள்ள தமிழகத்தில் ஒரு ராட்சசியை அறிமுகம் செய்து நாட்டை நாசம் ஆக்கியதில் தனக்கும் பங்கு உண்டு என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருந்து வருகிறார். இவர் சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கடுமையான விமர்சனம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- கமலாலயத்தில் போய் பேச வேண்டியதை ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து பேசலாமா? RN.ரவியை ரவுண்ட் கட்டும் டி.ஆர். பாலு

அவர் பேசுகையில்;- எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் பணியாற்றியுள்ளேன். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசங்கள் உண்டு. இவர்கள் மத்தியில் ராட்சசியை(ஜெயலலிதா) தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த பாவத்ததின் பலனை 10 ஆண்டுக்காலம் அனுபவித்தோம்.

ஜெயலலிதா ஐதராபாத்திற்கு செல்கிறார் என சொன்னதும் நடராஜன் எனக்கு போன் செய்து தடுத்து நிறுத்துங்கள் எனக் கூறினார். அப்பொது நானும் திருநாவுக்கரசும் கைலியோடு ஓடிச் சென்று தடுத்து நிறுத்தினோம். உங்களை விட்டால் நாட்டைக் காப்பாற்ற ஆள் இல்லை எனச் சொல்லி தடுத்து நிறுத்தினோம். அந்த பாவத்திற்கு பலனை இந்த நாடு 10 ஆண்டுக்காலம்  அனுபவித்தது. அதையெல்லாம் மாற்றி தளபதி இன்று மிகச்சிறந்த முறையில் ஆட்சியை நடத்தி வருகிறார் என கூறியுள்ளார். 

அதிமுகவில் இருந்து விலகி திமுக இணைந்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் ஜெயலலிதாவை  ராட்சசி என்று விமர்சித்திருப்பது அதிமுக தொண்டர்கள் மற்றும் அக்கட்சிதலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  அண்ணாமலை மனம் போன போக்கில் பாஜகவை தேர்வு செய்துள்ளார் - அமைச்சர் மஸ்தான் விமர்சனம்

click me!