இந்த பாஜக அரசில் எதை எடுத்தாலும் ஊழல்தான்… காய்ச்சி எடுத்த கவர்னர்

By manimegalai aFirst Published Oct 26, 2021, 9:43 PM IST
Highlights

இந்த கோவா பாஜக அரசில் எதை எடுத்தாலும் ஊழல் முறைகேடு தான் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கூறி அதிர வைத்துள்ளார்.

இந்த கோவா பாஜக அரசில் எதை எடுத்தாலும் ஊழல் முறைகேடு தான் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கூறி அதிர வைத்துள்ளார்.

மத்திய பாஜக அரசு நியமிக்கும் ஆளுநர்களில் பெரும்பாலோனோர் ஆளும் பாஜகவின் குரலாக இருப்பார்கள். ஆனால் அவர்களில் சற்றே வித்தியாசமானவராக பார்க்கப்படுவர் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்.

அதற்கான காரணமும் இல்லாமல் இல்லை. பாஜகவை பற்றி எப்போதும் காய்ச்சி தள்ளுவதுதான் அவரது ஸ்டைல். அண்மையில் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தேன், அப்போது அம்பானி தொடர்பான கோப்பும், ஆர்எஸ்எஸ் முக்கிய நபரின் கோப்பும் வந்தது, கையெழுத்து போட்டால் ஒரு பைலுக்கு 300 கோடி ரூபாய் கிடைக்கும் என்று போட்டு தாக்கினார்.

இவரின் கருத்து தீயாய் எங்கும் பரவ.. எதிர்க்கட்சிகள் லட்டு மாதிரி விஷயம் கிடைத்துவிட்டது என்று பாஜகவை பிறாண்டி எடுத்தன. இந் நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் பாஜக ஆளும்  கோவா அரசை காய்ச்சி எடுத்து இருக்கிறார்.

அவர் கூறி இருப்பதாவது: கோவாவில் ஆளும் பாஜக அரசு எதை செய்தாலும் அதில் ஊழல் இருக்கிறது. அதை நான் வெளிக் கொண்டு வந்ததன் எதிரொலியாக தான் நான் அங்கிருந்து இடமாற்றப்பட்டேன் என்று கூறி இருக்கிறார்.

அவரின் இந்த பேட்டி தான் இப்போது எதிர்க்கட்சிகளுக்கு தீனியாய் மாறிவிட்டது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றன.

click me!