சசிகலா பற்றி வாய் திறந்த அண்ணாமலை… என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா…?

Published : Oct 26, 2021, 09:13 PM IST
சசிகலா பற்றி வாய் திறந்த அண்ணாமலை… என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா…?

சுருக்கம்

சசிகலாவை பற்றி நான் ஏதாவது கருத்து கூறினால் அது தவறாகிவிடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

கோவை: சசிகலாவை பற்றி நான் ஏதாவது கருத்து கூறினால் அது தவறாகிவிடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

எதை பற்றியும் கவலைப்படாமல் டோன்ட் கேர் பாலிசியாக தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் சந்திக்க சசிகலா சுற்றுப்பயணம் தொடங்கிவிட்டார். அவர் அதிமுகவில் இல்லை, அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என்று நாள்தோறும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் போகிற இடமெல்லாம் போஸ்டர் ஒட்டாத குறையாக பேசி வருகின்றனர்.

எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் அதன் முடிவில் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளில் சசிகலா பற்றி இருந்தாலும் தலைமை நிர்வாகிகள் சளைக்காமல் பதில் கூறி வருகின்றனர். எடப்பாடிக்கு அதிர்ச்சி தரும் ஓபிஎஸ் கருத்து இருப்பதாக கூறப்பட்டாலும் அவர் யார் தொண்டர்கள் முடிவே தமது முடிவு என்று சூசகமாக கூறிவிட்டார்.

இந் நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையும் சசிகலா பற்றி கருத்து ஒன்றை கூறி இருக்கிறார். கோவை வந்திருந்த அவரிடம் செய்தியாளர்கள் சசிகலா பற்றிய கேள்வியை கேட்டு வைக்க அண்ணாமலை கூறியது இதுதான்:

சசிகலா அதிமுகவில் இணைத்து கொள்ளப்படுவாரா என்பது பற்றி அதிமுக தலைமையின் கருத்துகள் குறித்து நான் கூறினால் அது தவறாக போய்விடும். அவர் அரசியலுக்கு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

அதிமுகவில் சிலர் பேசுவதை நாங்கள் அவர்களின் கருத்தாக பார்க்கிறோம். ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருக்கிறது. கூட்டணி தொடர்பாக அனைத்தும் மத்திய தலைமை முடிவு எடுத்து வருகிறது என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்