உச்ச நட்சத்திரம் சகோதரர் ரஜினிகாந்த் அவர்களே… சீமான் போட்ட திடீர் டுவிட்…

Published : Oct 26, 2021, 08:29 PM IST
உச்ச நட்சத்திரம் சகோதரர் ரஜினிகாந்த் அவர்களே… சீமான் போட்ட திடீர் டுவிட்…

சுருக்கம்

நாட்டின் மிக உயரிய திரை விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சென்னை: நாட்டின் மிக உயரிய திரை விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் உள்ளதாவது: இந்தியாவின் மிக உயரிய திரை விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள தமிழ்நாட்டின் உச்சத் திரைநட்சத்திரம் மதிப்பிற்குரிய சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ள என் அன்புத்தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கும் சிறப்பு தேசிய விருதினைப் பெற்றிருக்கும் சகோதரர் பார்த்திபன் அவர்களுக்கும், எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ள தம்பி தனுஷ், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினைப் பெற்றுள்ள தம்பி இமான், சிறந்த துணை நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ள தம்பி விஜய்சேதுபதி, சிறந்த ஒலிக்கலவைக்கான விருதுபெற்ற சகோதரர் ரசூல் பூக்குட்டி மற்றும் குழந்தை நாகவிஷால் ஆகியோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன்.

விருதுபெற்ற அனைவரும் தொடர்ந்து இதுபோன்று சிறந்த படைப்புகள் கொடுத்து, தமிழ்த் திரைக்கலைத்துறையில் மேலும் பல சாதனைகள் புரியவும், இன்னும் பல உயரிய விருதுகள் வென்று, புகழும் பெருமையும் பெறவேண்டுமென உள்ளன்போடு விழைகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!