Sasikanth Senthil : அண்ணாமலை ஒரு ஊதுகுழல்... சுயமாக சிந்திக்கும் திறமை இல்லை.! விளாசும் சசிகாந்த் செந்தில்

By Ajmal Khan  |  First Published Apr 1, 2024, 1:22 PM IST

இன்று வெளியே எரிகின்ற நெருப்பு, உங்க வீட்டுக்கு வருவதற்கு நேரம் ஆகாது. அதனால் ஜனநாயகத்தின் அரசியலமைப்பு சட்டத்தையும் அதை நம்பி அதன் கூட வர மக்கள் முயற்சி செய்ய வேண்டும் என  திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 


அண்ணாமலை ஒரு ஊதுகுழல்

திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியின் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் இன்று. கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடம் கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இறுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திருவள்ளூர் தொகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் அதற்கான திட்டங்கள் வகுக்கப்படும் என கூறினார். 

Tap to resize

Latest Videos

இந்தி எதிர்ப்பு தொடர்பாக அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தி எதிர்ப்பு போராட்டதை அண்ணாமலை விமர்சித்து பேசி இருப்பது ஆதிக்க மனப்பான்மை காட்டுவதாகவும். அண்ணாமலை ஒரு ஊதுகுழல் என்றும் அவர் சுயமாக சிந்திக்கும் திறமை இருக்கா என்று  எனக்கு தெரியவில்லை என தெரிவித்தார். 

ஈடி, சிபிஐ மூலம் மிரட்டல்

பாசிச சக்தி கீழே வேலை பார்ப்பவர்கள் அப்படி தான் இருப்பார்கள் .அவர் தலைவர்கள் மட்டும் தினம் பொழுதுபோக்காக  பேசிட்டு இருப்பர். அவர் பேசுவது அவருக்கு புரிகிறதா எனக்கு தெரியவில்லை.  எனவே மக்கள் அதனை எப்படி பார்ப்பார்கள் என வருகிற தேர்தலில் தெரியும் என சசிகாந்த செந்தில் தெரிவித்தார்.  அரவிந்த் கெஜ்ரிவால் கைது மட்டும் இல்லை இன்னும்  அரசியலால் எதிர்கொள்ள முடியாதவர்கள் அமலாக்கத்துறை, சிபிஐ வைத்து பண்ண போறார்கள் இதெல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான்.  இது எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது என நினைக்கத் தோணவில்லையென கூறினார். 

நெருப்பு நாளை வீட்டிற்கே வரலாம்

மாநிலத்தின் முதலமைச்சருக்கு இது போன்று ஆகும் போது ஒரு சாமானியர்களை அவர்கள் எந்த எந்த நிலையில் டீல் பண்ணுவார்கள் என்று அவர்களுக்கு கொடி தூக்குபவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். இன்று வெளியே எரிகின்ற நெருப்பு, உங்க வீட்டுக்கு வருவதற்கு நேரம் ஆகாது. அதனால் ஜனநாயகத்தின் அரசியலமைப்பு சட்டத்தையும் அதை நாம்பி அதன் கூட வர மக்கள் முயற்சி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவது தொடர்பான பாரபட்சம் காட்டுவதாக கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், இந்தியாவில் சுதந்திரமாக இருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் இது தான் நிலைமை. இதற்க்காத்தான் மக்களை நோக்கி நாங்கள் செல்வதாக கூறினார். 

இதையும் படியுங்கள்

நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மைக்குக்காக மேடையில் சண்டையிட்ட திமுக அமைச்சர்கள்

click me!